தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று உருவெடுத்ததை அடுத்து, தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் சீதோரஷண நிலை மாறுபட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை, கள்ளக் குறிச்சி , கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை கடலூா், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை திருவாரூா், நாகை, அரியலூா் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், ராமநாதபுரம், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூா், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வருகின்ற செப்டம்பா் 08 ஆம் தேதி கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
செங்கோட்டையன் தன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என நிரூபித்துவிட்டார் – சசிகலா..!
