15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதாற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.
நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய 781 எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்ஷன் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், பஞ்சாப் ஷிரோமணி அகாலி தள், பிஜூ ஜனதா தளம், பி.ஆர்.எஸ். உள்ளிட்ட 3 கட்சிகள் மற்றும் சில சுயேட்சை எம்.பிக்கள் புறக்கணித்துள்ளதால் 769 எம்.பிக்கள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர். இதனால் வெற்றிக்கு 385 வாக்குகள் தேவையாகும்.

தற்போது லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர். பார்லிமென்ட்டில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. பின்னர் 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுமார் 2 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரமான சம்பவம் செய்ய தயாராகும் சிவகார்த்திகேயன்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!


