spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவிடம் சரண்டரான அண்ணாமலை! ஸ்டாலினிடம் சிக்கிய ஆதாரங்கள்! அமித்ஷாவுக்கு செம ஆப்பு!

திமுகவிடம் சரண்டரான அண்ணாமலை! ஸ்டாலினிடம் சிக்கிய ஆதாரங்கள்! அமித்ஷாவுக்கு செம ஆப்பு!

-

- Advertisement -

தமிழக அரசியல் களம் இன்றைய தேதிக்கு 5 முனை போட்டியாக மாறி உள்ளதாக  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

தமிழக அரசியலின் தற்போதைய கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளவது:- திமுக கூட்டணியோடு சேர்த்து பலமாக தான் உள்ளதாக தெரிவதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிற எண்ணம் பெரிய அளவுக்கு இருப்பதாக தெரியவி ல்லை என்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஜூனியர் விகடனில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாஜகவின் மாஜி ஒருவர், பெரிய அளவில் நிலப் பரிவர்த்தனை செய்துள்ளார் என்றும், பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் கோவையில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று பதிவு செய்து உள்ளனர். இதற்கு உதவியது மதுரையை சேர்ந்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் என்றும். இது நடந்து சில வாரங்கள் ஆகிறது. தற்போதுதான் பொது வெளிக்கு வந்து உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரை இப்படி சொல்கிறார் என்று நான் மக்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது மாதிரி தான் நான் உணர்கிறேன்.‘

we-r-hiring

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

அண்ணாமலையின் சிறப்பே அவர் திமுகவை எதிர்ப்பது தான். அண்ணா பல்கலைக்கழகம் முதல் அனைத்து விஷயங்களுக்கும் திமுக எதிர்ப்புதான் பிரதானம். அதன் காரணமாகவே அவருக்கு அரசியல் ஒளிவட்டம் கிடைத்தது. தற்போது திடீரென புகழ்ந்து பேசுகிறார் என்றால், பிம்பம் சிதையும்.இதன் பின்னணி என்ன என்கிற சந்தேகம் வரும். ஏற்கனவே அண்ணாமலை மீது பாஜக மேலிடம் அதிருப்தியில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கும் என்று அதற்கும் தோதாக பேச ஆரம்பித்துள்ளார். அவர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுப்பதற்கு, அவரிடம் பதவியும் இல்லை. அண்ணாமலை தனக்கான வாய்ப்பை டெல்லியில் தேடி இருப்பார். ஆனால் அதற்கான கிரீன் சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. அமித்ஷா வைத்த குறி தப்பவே தப்பாது என்று பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பார்த்தால் எல்லாம் தப்புக் கணக்காகவே தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

இன்றைக்கு செங்கோட்டையன் வீட்டிற்கு ஆதரவாளர்கள் சாரை சாரையாக வந்து ஆலோசனை மேற்கொள்கிறார்கள். செங்கோட்டையனுக்கு திடீர் புகழ் நிறைய கிடைக்கிறது. ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு வரை கவர் செய்கின்றன. அதிமுகவை திமுக பலவீனப்படுத்துவதாக சொல்வது பைத்தியக்காரத்தனமாகும். அதிமுக பலவீனமான பிறகு திமுக பயன்படுத்த நினைக்கிறது என்று வேண்டுமானல் சொல்லலாம். செங்கோட்டையனின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள பலரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட்டனர்.

ஜெயலலிதா இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறபோது அவரது வசீகரம் காரணமாக அது பெரிது படுத்தப்படாது. இந்த விவகாரத்தின் பின்னணியில் பாஜக இருக்கிறது என்று எனக்கு தொடக்கம் முதலே சந்தேகம் உள்ளது. அதிமுக பலவீனப்பட்டால் அது பாஜகவுக்கு லாபம் தான். அதிமுகவின் இடத்தை பிடிக்க விஜய் முயற்சிக்கிறார். அவர் சனிக்கிழமை சனிக்கிழமைகளில் டூர் பிளான் போட்டுள்ளார். சனிக்கிழமை டூர் பிளான் போட்டிருக்கும் ஒரு அரசியல்வாதியாக விஜய் மாறிவிட்டார்.

அப்போது தமிழ்நாடு அரசியல் எதை நோக்கி செல்கிறது? திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஒரு பாதையில் பயணம் போய்க் கொண்டிருக்கிறது. ஆட்சி மீது அதிருப்தி, குறைபாடுகள் இருக்கிறது. ஆனால் அந்த அலை பாதிக்காது என்று அண்ணாமலையே சான்றிதழ் கொடுக்கிறார். அது ஒரு தனி ரகமாக ஓடுகிறது. அதிமுக வெற்றி பெறுவதற்கு உழைப்பது போன்றே தெரியவில்லை. அமித்ஷா வைத்த குறி, அது தனியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் அமித்ஷா பிடியில் அதிமுக உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். அதேநேரத்தில் அமித்ஷாவின் இலக்கை அதிமுக அடையுமா? என்பதிலும் சந்தேகம் உள்ளது.

விஜயின் டூர் மழைக்காலத்தில் போய் மாட்டும். அப்போது பலதரப்பட்ட திட்டங்களுடன், டூர் பிளானை வகுக்க வேண்டும். முதலில் டூர் பிளான் வகுப்பதில் செங்கோட்டையன் நிபுணர். அவர்தான் விஜய்க்கு, டூர் பிளானை வடிவமைக்க போகிறார் என்று சொன்னார்கள். கடைசியில் பார்த்தால் அப்படியும் இல்லை. அப்போது, தமிழக அரசியலில் பல தலைவர்கள் அவரவர் வழியில் பிய்த்துக்கொண்டு போகிறார்கள். நோக்கம் ஒன்றுதான். நிலைநிறுத்திக்கொள்வது. 75 வயதுக்கு பிறகு அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள போராடுகிறார்களே என்கிறபோது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

மீண்டும் பழைய கூட்டணிக்கு செல்வதில் அதிமுகவுக்கு எந்த தயக்கமும் கிடையாது. கூட்டணி என்பது திட்டமிட்ட முடிவுகள் எதுவும் கிடையாது. அந்த அந்த தேர்தலுக்கு எடுக்கின்ற முடிவுதான். அதிமுகவில் மீண்டும் செங்கோட்டையனை சேர்த்துக் கொள்வார்களா என்றால்? சேர்த்துக் கொள்வார்கள். நமக்கு தேவை. அவர் இருந்தால்தான் வாக்குகள் வரும் என்றால், எம்ஜிஆர் எஸ்டிஎஸ்-ஐ சேர்த்துக் கொண்டது போல, காளிமுத்துவை ஜெயலலிதா சமரசம் செய்தது போல, அப்படி செங்கோட்டையனையும் சேர்த்துக் கொள்வார்கள். அசியலே அப்படிதான். நமக்கு தேவை என்றால் தானாகவே இறங்கி போவோம். எனவே அரசியலில் எதுவும் முற்றான முடிவுகள் இல்லை. 2026 தேர்தலுக்கு என்ன ஆகும்? என்று வேண்டுமானால் பார்க்கலாம்.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இப்படியான குழப்பங்கள் நீடிப்பது ஒன்று விஜய்க்கு சந்தோஷத்தை கொடுக்கும். அவருக்கு வாக்கு வங்கி கூடும். அவர் கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும். இரண்டாவது அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் 5-வதாக ஒரு அணி வரும். பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. திமுகவில் 30 முதல் 40 இடங்களை வழங்க வாய்ப்பு இல்லை. எனவே ராமதாஸ் 5வது அணியை நோக்கி செல்கிறார். எனவே தற்போதைய சூழலிலி திமுக அணி, அதற்கு எதிராக நிறைய அணிகள் வரும் என்றுதான் நினைக்கிறேன். இன்றைய தேதிக்கு சீமானையும் கணக்கில் எடுத்து பார்த்தோம் என்றால் 5 முனை போட்டியாக தான் வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ