spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவாக்களர் பட்டியல் முறைகேடு குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்த ஆதிமுக

வாக்களர் பட்டியல் முறைகேடு குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்த ஆதிமுக

-

- Advertisement -

ஆயிரம் விளக்கு மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு. வாக்களர் பட்டியல் முறைகேடு குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்த ஆதிமுக

அதிமுக நிர்வாகிகள் இன்று சென்னை ஆட்சியரிடம் வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் குறித்த விவரங்களை வழங்கினர். அதை தொடர்ந்து கட்சியின் செய்தித்தொடர்பாளர் கோவை சத்தியன், மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் செய்தியாளர்களை சந்தித்தனர்.

we-r-hiring

அப்போது பேசிய கோவை சத்தியன், ”வாக்காளர் பட்டியலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட 15 பூத்துகளில் வீடு வீடாக சென்று கணக்கீடு செய்த போது அதில், இறந்தவர்கள் 553 பேர் பட்டியலில் இருந்தது தெரியவந்திருக்கிறது. அதேபோல, இடமாறுதலுக்காக சென்றவர்கள் 1136 பேரும், இரு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் 33 பேரும், மொத்தமாக 1722 பேர் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதியில் 15 பூத்துகளில் மட்டும் இவ்வளவு குளறுபடிகள் இருக்கிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.வாக்களர் பட்டியல் முறைகேடு குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்த ஆதிமுக

இதே போல, ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியிலும் குளறுபடி இருப்பது தாங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்திரப்பதாகவும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இதே போல இருக்க வாய்ப்பு இருப்பதால் அதிகாரிகளை வைத்து வீடு வீடாக சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே அதிமுக நீதிமன்றம் சென்று ஒரு சில தொகுதிகளுக்கு இதுபோல தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி இருப்பதால் அதேபோன்ற நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.”

புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு உதவித் தொகை…

MUST READ