spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைரஜினியை வைத்து விஜய்க்கு செக் வைத்த ஸ்டாலின்! எதிர்பாராத திருப்பம்! திணறும் விஜய்!

ரஜினியை வைத்து விஜய்க்கு செக் வைத்த ஸ்டாலின்! எதிர்பாராத திருப்பம்! திணறும் விஜய்!

-

- Advertisement -

நடிகர் விஜய்க்கு போட்டியாக, ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற நடிகர்களை முதலமைச்சர் களமிறக்கி உள்ளதாகவும், ரஜினி ரசிர்களின் வாக்குகள் இம்முறை திமுகவுக்கே கிடைக்கும் என்றும் ஊடவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

senthilvel new
senthilvel new

திருச்சியில் நடிகர் விஜய் பிரச்சார நிகழ்வின் போது நிகழ்ந்த தவெகவினரின் அத்துமீறல்கள் குறித்து ஊடகவியலாளர் செந்தில் வேல் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் வருகையின் போது, தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கிற்காக வெளிநாட்டில் இருந்து வந்த மகன் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தார். விஜயை பார்க்க கூடியிருந்தவர்கள் மரக்கடை பகுதியில் உள்ள ஓட்டு வீடுகளின் மீதும், ஆஸ்பெட்டாஷ் கூரைகளின் மீது ஏறி நிற்கின்றனர். ஓடுகின்றனர். அது உடைந்து போய்விட்டால், யார் பணம் தருவார்கள்?. பிரச்சாரம் நடைபெற்ற இடம் ஒரு போர்க்கலம் போல காட்சி அளித்தது. அந்த பகுதியில் சாலையோரம் இருந்த 2 மரக் கடைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.

we-r-hiring

அந்த கடைக்குள் ஸ்டாலின் படம் இருந்ததால் உடைத்தனர். பெரம்பலூருக்கு நள்ளிரவு 12.30 மணி வரை விஜய் போகவே வில்லை. அங்கு காத்திருந்த மக்கள் எல்லாம் விஜயை திட்டிவிட்டு புறப்பட்டு சென்றார்கள். திருச்சி விமான நிலையத்தை சூரையாடிவிட்டனர். இவ்வளவுக்கும் மத்தியில் மரக்கடை பகுதிக்கு சென்று உரையாற்றினாரா? என்றால் அதுவும் கிடையாது. அரசுப்பள்ளி கழிப்பறைகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். என்டிடிவி தொலைக்காட்சியின் நிருபர் சாம் டேனியல்ஸ் அவர் செய்தி சேரிக்கும்போது, அவர் அருகிலேயே தொண்டர் ஒருவர் ஆடிக் கொண்டு வருகிறார். மேலும், தன்னுடைய துண்டை கொண்டு அவரை இழுக்கிறார்.

விஜய் என்கிற உச்ச நட்சத்திரம் வருகிறார். அவர் வரும்போது கூட்டம் கூடத் தான் செய்யும் என்று சொல்லலாம். ஆனால் அதே விஜய் பாலவாக்கத்தில் தனது வீட்டின் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அப்போது ஒரு கூட்டமும் இல்லை ஏன்? அன்றைக்கு தள்ளுமுள்ளு நடக்கவில்லை ஏன்? அதற்கு காரணம் முன்னறிவிப்பு இன்றி யாருக்கும் தெரியாமல் வந்தார். மாலை அணிவித்த உடன் புறப்பட்டு சென்றார். பெரியார் திடலுக்கு வந்தார். ஒரு கூட்டமும் இல்லை. அமைதியாக மாலை அணிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

இதே விஜய், மதுரை மாநாட்டிற்கு வந்தார். எப்படி குறித்த நேரத்திற்கு வந்தார்? அவரால் எப்படி குறித்த நேரத்திற்கு முன்னதாக வர முடிந்தது. அப்போது ஏன் அவருடைய வாகனத்திற்கு முன்பாகவும், பின்னாலும் வாகனங்கள் போகவில்லை?  ஏனென்றால் அவர்கள் நினைத்தால் அதை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.

விஜய் எப்படி வருகிறார். எந்த வாகனத்தில் வருகிறார் என்று சொல்லாமல் ரகசியமாக வைத்து, சரியாக அவரை மதுரை மாநாட்டில் மேடை ஏற்றுவதற்கு தெரிந்த தவெகவினருக்கு, திருச்சியிலும் அதேபோல் வர முடியும். அப்போது உங்களுடைய திட்டம் ரோடுஷோ நடத்துவதாகும். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜயின் பேருந்து வேகமாக புறப்பட்டு சென்றால்? முன்னாள் செல்பவர்கள் வழிவிட்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் வேண்டுமென்றே மெதுவாக சென்று கூட்டம் சேரவிட்டு, போக்குவரத்து நெரிசலை உருவாக்கினீர்கள். விஜய்க்கு கூட்டம் சேர்வதோ, வாக்குகளை பெறுவதோ முக்கியமில்லை. ஆனால் இன்றைக்கு அது பிரச்சினை அல்ல. நீங்கள் கட்சி என்கிற பெயரில் செய்து கொண்டிருக்கும் அட்டூழியங்கள். தொண்டர்கள் என்கிற பெயரில் இருக்கும் தற்குறி கூட்டம்.

முதலமைச்சர் ஸ்டாலின் பயந்துவிட்டார் என்று தவெகவினர் சொல்கின்றனர். ஆனால் அவர் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருந்தார். அவர் தெளிவாக சொல்லிவிட்டார். நான் பேச விரும்பவில்லை. நான் வேலை செய்ய போகிறேன் என்று சொல்லிவிட்டார். நேற்று முதலமைச்சர் தன்னுடைய வேலையை தொடங்கிவிட்டார். ரஜினிகாந்த், விஜய்க்கு ஆப்பு வைத்தார் பார்த்தீர்களா? ரஜினிகாந்த் மூலமாகவும், கமல்ஹாசன் மூலமாகவும், அஜித்குமார் மூலமாகவும் விஜய்க்கு ஆப்பு வைக்கப் போகிறார் முதலமைச்சர்.

நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு பாராட்டு விழா நடந்தது. அந்த பாடல்களை எல்லாம் தேர்வு செய்தவர் முதலமைச்சர். அதில் 2 பாடல்களை தவிர மற்ற அனைத்து பாடல்களும் ரஜினி, கமல் பாடல்களாகும். அதன் பிறகு ரஜினிகாந்த் பேசினார். அப்போது, டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களையும், இங்கே இருந்த எதிர்க்கட்சிகளையும் புதிதாக வந்திருக்கும் எதிரிகளையும் சமாளித்து, வாங்க 2026 தேர்தலில்  பார்க்கலாம் என ஸ்டாலின் கெத்தாக நிற்பதாக சொல்லிவிட்டார்.

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?

ரஜினி அப்படி பேச காரணம், மதுரை மாநாட்டில் நான் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அரசியலுக்கு வராமல் போவதற்கு சில நபர்கள் மாதிரி இல்லை என்று சொன்னார். ரஜினிகாந்தை போய் விஜய் சீண்டினார். ரஜினிகாந்த் மருத்துவ மனையில் இருந்தபோது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக பதிவிட்டனர். தற்போது ரஜினிகாந்தின் ஆதரவாளர்கள் எல்லாம், விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தற்போது அவருடைய ஆதரவாளர்களின் வாக்குகளும் திமுகவுக்கு வரும். இந்த தேர்தலில் அவர்களுடைய பிரதான நோக்கம் விஜயை வீழ்த்துவதாக தான் இருக்கும். பாஜக எப்படியும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப் போவது இல்லை. அதற்கு வாக்களித்து விஜய்க்கு கூடுதல் வாக்குகள் வருவதை விட, நம்முடைய வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.

ஏற்கனவே கமல்ஹாசன் திமுக கூட்டணியில்தான் இருக்கிறார். அஜித்குமார், கார் ரேஸ் செய்கிறபோது தமிழ்நாடு அரசின் இலச்சினையை அணிந்து போட்டிகளில் பங்கற்கிறார். இவர்கள் அஜித் ரசிகர்களையும் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, அவர்களும் வருவார்கள். 40 வயதுக்கு மேல் ஒருவரை அங்கே காணவில்லை. விஜய் நீங்கள் இப்படியே செய்யுங்கள்.இதுதான் நல்லது. அப்போதுதான் மக்களுக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியும். உங்களிடம் உள்ளது அரசியல் முதிர்ச்சி அற்ற கூட்டம் என்று மக்களுக்கு அப்போது தான் தெரியும். மக்கள் விழித்துக்கொள்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ