spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் -...

பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் – திட்ட இயக்குனர் தகவல்

-

- Advertisement -

சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்து சேவை தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.பூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் - திட்ட இயக்குனர் தகவல்சென்னையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் குறித்து பேசிய மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன், “மெட்ரோ 2ம் கட்ட வழித்தடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கி.மீ.க்கு நடைபெறுகிறது. பூந்தமல்லிபோரூர் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இதே போன்று போரூர்கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையேயும் கோயம்பேடு முதல் நத்தம்பாக்கம் வர்த்தக மையம் இடையேயும் 2-ம் கட்ட மெட்ரோவின் மற்றொரு சேவை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

பூந்தமல்லிபோரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையம்கிளாம்பாக்கம், பூந்தமல்லிசுங்குவார்சத்திரம், கோயம்பேடுஆவடி மெட்ரோ ரயில் திட்டம் உயர்மட்ட பாதையாக அமைக்கப்பட உள்ளது. மாதவரம்சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தடத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 6 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

தத்தளிக்கும் கொல்கத்தா…தவிக்கும் மக்கள்…

we-r-hiring

MUST READ