spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதத்தளிக்கும் கொல்கத்தா…தவிக்கும் மக்கள்…

தத்தளிக்கும் கொல்கத்தா…தவிக்கும் மக்கள்…

-

- Advertisement -

கொல்கத்தா நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.தத்தளிக்கும் கொல்கத்தா…தவிக்கும் மக்கள்…கொல்கத்தாவில் மழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுவரை 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் எங்கு பாா்த்தாலும் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா காரியா கம்தாரி பகுதியில் சில மணி நேரத்தில் 33 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பொிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் தண்ணீரில் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா ஜோத்பூர் பூங்காவில் 29 செ.மீ., கலிகட் 28 செ.மீ., டாப்சியா பகுதியில் 27 செ.மீ. மழை பெய்துள்ளது. கொல்கத்தா நகரில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தா பேனியபுகுர், கலிகாபூர், நேதாஜி நகர், காரியாஹட், ஏக்பலாப்பூரில் மழைக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!!

MUST READ