இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள ஸ்மார்ட்போன் விற்பனை, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. பண்டிகைகளுக்கான முன்கூட்டியே ஏற்பட்ட தேவை, தள்ளுபடி விற்பனை, புதிய மாடல்கள் அறிமுகம், பிரீமியம் போன்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் 5G பரவல் போன்ற காரணங்களால் விற்பனை அதிகரித்துள்ளன. குறிப்பாக ரூ.25 ஆயிரத்துக்கு மேல் உள்ள போன்களே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
மேலும், கிராமப்புறங்களில் இத்தகைய ஸ்மாா்ட் போனின் தேவை அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு 5% வளர்ச்சி. ஆண்டுக்கு ஆண்டு 18% வளர்ச்சி (இது அதிகபட்ச காலாண்டு மதிப்பு). மொத்தத்தில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை வலுவான இடத்தினை பெற காரணமாக அமைந்துள்ளன.
ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தரவேண்டும் – அன்புமணி கோரிக்கை



