spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் அரெஸ்ட்! திருமா செக்... டெல்லிக்கு ஓடு! விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!

விஜய் அரெஸ்ட்! திருமா செக்… டெல்லிக்கு ஓடு! விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மீது வழக்கு செய்யப்பட்டதற்கான என்ன நியாயம் உள்ளதோ, அதே அளவு நியாயம் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கும் உள்ளது என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் குறித்த விஜய் வெளியிட்ட வீடியோ தொடர்பாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஆர்எஸ்எஸ் சொல்லிதான் விஜய் வீடியோ வெளியிட்டார் என்பதற்கு அவருடைய செயல்பாடுகள் தான் சான்று. உண்மையிலேயே தொண்டர்களின் நலனை விரும்புபவராக இருந்தால் அவர் எப்படி வெளிப்பட்டு இருப்பார் என்பதையும், தற்போது அவர் எப்படி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் பார்க்கும்போது அதற்கு பெரியளவில் வாத பிரதிவாதம் தேவையில்லை. அவருடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவர் யாருடைய கைக்கூலி என்று காட்டுகிறது. விஜய் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும்போது, அவருடைய அரசியல் எதிரியான திமுக அவரை அம்பலப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவும் அதை செய்கிறது. விஜயின், மற்றொரு எதிரியான பாஜக விஜயை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பது கரூர் சம்பவத்தில் இருந்து இந்த நிமிடம் வரை போய்க் கொண்டிருக்கிறது. கருர் கூட்டநெரிசில் விவகாரத்தை தவெக முழுக்க முழுக்க அரசியலாக்கி கொண்டிருக்கிறது. நீதிமன்றத்திற்கு செல்ல தெரிந்தவர்களுக்கு ஏன் கரூர் மருத்துவமனைக்கு செல்லத் தெரியவில்லை. சிபிஐ விசாரணை கேட்கத் தெரிந்தவர்களுக்கு, ஊடங்களில் தங்கள் தரப்பு நியாயத்தை ஏன் சொல்லத் தெரிய வில்லை.

கரூர் மரணத்தால் வலியிலும், வேதனையிலும் இருப்பவர்களுக்கு விமானம் பிடித்து டெல்லிக்கு செல்லதெரிகிறது. அவர்களுக்கு முக்கியமான பாஜக தரப்பு ஆட்களை சந்திக்க தெரிகிறது. சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் போய் நிற்கத் தெரிகிறது. வீடியோ போட்டு சி.எம். மீது குற்றச்சாட்டு வைக்க தெரிகிறது. அவர்களால் எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் செந்தில் பாலாஜியை கார்னர் செய்ய தெரிகிறது. இவ்வளவு தெரிந்தவருக்கு, எப்போதும் போல தன்னுடைய பனையூர் அலுவலகத்தில் வைத்தாவது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தெரிய வில்லையா? பாதிக்கப்பட்டர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தாவது ஆறுதல் தெரிவிக்க தெரியவில்லையா? இதுவரை கருரில் பலியான 41 பேரின் படங்களை வைத்து தவெக அலுவலகத்தில் அஞ்சலி கூட்டம் நடத்தி உள்ளனரா? விஜயுடைய துக்கத்தைவிட இழப்பை சந்தித்தவர்களின் துக்கம் தான் மேலானது. கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன நியாயம் உள்ளதோ, அதே அளவு விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்ய நியாயம் உள்ளது. காலத் தாமதம் செய்தது யார்? மக்களை மணிக்கணக்கில் காக்க வைத்தவர் யார்? விஜய் அரசியலுக்கு தகுதி அற்றவர்.

அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். அவர் நாள்தோறும் குழந்தைகளுடன் பயணிப்பவர். 10 குழந்தைகள் இறந்துகிடப்பதை பார்த்து ஒரு மனிதராக அவர் கண்ணீர் வடிக்கிறார். ஜெயலலிதா இறந்தபோது நீங்கள் வடித்த போலிக்கண்ணீர் போன்றது அல்ல அது. அங்கே யார் போனாலும் அழுது இருப்பார்கள். 10.5 சதவீதம் கொடுத்தபோது, இது நீதிமன்றத்தில் நிற்காது என்று நன்றாக தெரிந்தும் அன்புமணி அழுததுதான் நாடகமாகும். விஜய் மேக்அப் போட்டுக் கொண்டு, ட்ரிம் செய்துவிட்டு, 4 நாட்கள் ஒத்திகை பார்த்துவிட்டு 4 நிமிஷம் பேசுகிற வீடியோவில் ஒரு துக்கமில்லை. ஒரு வருத்தம் இல்லை. ஒரு வலி வெளிப்படவில்லை. மாறாக தன்னுடைய தவறுகளை மறைக்கும் விதமாக அரசியல் எதிரியின் மீது பழிபோட்டுவிட்டு அவரை சவாலுக்கு கூப்பிடுகிறார். இதைவிட இன்னும் வலிமையாக அரசியல் செய்வோம் என்று அரசியல் கண்டென்ட்டை அதற்குள் வைக்கிறீர்கள் என்றால்? நீங்கள் யார்? கரூர் கூட்டநெரிசலில் 41 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீண்டு எழுந்துவர வேண்டும் என்று வீடியோ போட வேண்டும். ஆனால் இவர்கள் கட்சியை மீண்டு எழ வைப்போம் என்று சொல்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் இவர்கள் போகவில்லை. இது தான் தொண்டர்கள் பற்றி குறைந்தபட்ச நேயமும் இல்லாத வன்மமான அரசியல் பேச்சு. விஜயை அம்பலப்படுத்த வேறு யாரும் தேவையில்லை. விஜய் வெளியே வர வர அவர் அம்பலப்படுவார்.

கரூர் துயர சம்பவம் போன்ற ஒரு விஷயத்தை வைத்து விஜய்க்கு நெருக்கடி அளிக்க வேண்டிய கட்டாயம் திமுக கூட்டணிக்கு கிடையாது. எங்களுடைய எதிரியும் விஜய் கிடையாது. விஜய் தன்னுடைய அதிகார வெறிக்காக அவர் மலிவான அரசியலை செய்கிறார். அதற்காக இல்லாத எதிரியை கட்டமைக்கிறார். பாஜக எதிர்ப்பு அரசியல் என்பது மாதிரி பேசி, பாஜகவை எதிர்த்து களத்தில் நின்று சந்திக்கிற வலிமை அவருக்கு கிடையாது. தற்போதே அவர் யார் யாரை சந்திக்கிறார்? யார் யார் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது ஒரு சம்பவத்திலேயே தெரிந்துவிட்டது. இவர் எப்படி அரசியல் நெருக்கடிகளை தாண்டுவார். விஜய் தப்பு தப்பாக சொல்கிறார். பிழையாக செய்துகொண்டிருக்கிறார். விஜய்க்கு மிகப்பெரிய ஊடக வலிமை உள்ளது. அவர் தப்பே செய்தாலும் போற்றி பாதுகாக்க ஊடகங்கள் தயாராக உள்ளன. விஜய் தன்னுடைய கருத்துக்களை ஆணையத்திடம் சொல்லாமல் பொதுவெளியில் வைக்கும்போது, அதை பொதுவெளியில் மறுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

எவ்வளவு பேக் வீடியோக்கள். 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு என்று சொன்ன உடன் 2,500 வீடியோக்களை டெலிட் செய்துவிட்டு ஓடிவிட்டார்கள். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டியது அரசினுடைய கடமை. விஜய் இப்படி எல்லாம் பழியை போட்டுவிட்டு. 3 நாட்களாக ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்திவிட்டு. 25 நபர்களை வைத்து பேச வைத்துவிட்டு, இதன் இறுதிக்கட்டமாக புரட்சி வெடிக்கணும். இளைஞர்கள் வீதிக்கு வர வேண்டும் என்று ஒரு கருத்தை சொல்கிறார்கள். அதற்கு முன்னேற்பாடாக அரசாங்கத்தின் மீது வெருப்பை மூட்டி, முதலமைச்சர் மீது கோபத்தை மூட்டி கடைசியில் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள். அப்போது இது திட்டமிட்ட சதி. இந்த இடத்தில் சதியை முறியடிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்படுகிறது. அதை செய்தால் தவறா?  அவதூறுகளையும், வன்மத்தையும் பரப்பியவர்கள் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

41 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதை திசை திருப்புவதும், வீடியோ போடுவதும் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும். விஜய் கரூர் வரும்போது கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே போக வேண்டாம் என போலீசார் சொல்லியுள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை. ஒரு வேளை விஐயை போலீசார் தடுத்து  கைது செய்திருந்தால், எத்தனை உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கும். அப்போது காவல்துறையின் மீது தான் குற்றம்சாட்டப்படும். எனவே காவல்துறை சிறப்பாகவே செயல்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ