கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பத்திரிகையாளர் பெலிக்ஸ் உருவாக்கிய சதி கோட்பாட்டை, விஜய் தரப்பினர் பிடித்துக்கொண்டு, அதற்கான திரைக் கதையை 3 நாட்களாக வடிவமைத்துள்ளார்கள் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் மரணங்களும், அதை தொடர்ந்து அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் விஜய் வெளியிட்ட வீடியோவின் பின்னணி குறித்து இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- ஒரு சதி கோட்பாடு எப்படி மைய நீரோட்ட கதையாடலாக மாறி இருக்கிறது என்பதுதான் விஜயின் வீடியோ காட்சியாகும். அவர் மிகவும் இயற்கையாக, பின்னால் காக்கா கத்துவதை போன்று செல்போனை வைத்து பேசுவதாக அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ காட்சியை வெளியிட அவருக்கு 72 மணி நேரம் ஆகியுள்ளது. இந்த 72 மணி நேரத்தில் என்ன நடைபெற்றது என்பதுதான் சதிக் கோட்டினுடைய டெவலெப்மெண்ட். விஜயின் வாகனத்தை அங்கே போக வேண்டாம். இங்கே பேசுங்கள் என டிஎஸ்பி சொன்ன போதும் கேட்காமல் ஆதவ் அர்ஜுனா அங்குதான் போய் தீர வேண்டும் என்று போகிறார். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வாகனத்தை காட்ட வேண்டும் என்பது தான் பிராஜக்ட். பிரச்சார பகுதியை 7.09 மணிக்கு வந்தடைகிறார்கள். 7 மணி முதலே ஆம்புலன்ஸ்களுக்கு அழைப்பு வர தொடங்கிவிட்டதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சொல்கின்றனர்.
விஜய் 7.12 மணிக்கு பேச தொடங்கும் போதே அவருக்கு வலது புறத்தில் இருந்து செருப்பு வீசப்படுகிறது. கீழே எல்லோரும் மயங்கி விழுந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காக போடுகிறார்கள். அதை பார்த்துவிட்டு விஜய் தண்ணீர் பாட்டில்களை எடுத்து போடுகிறார். பிரச்சினையில் தொடர்ந்து பேசலாமா என சந்தேகம் ஏற்பட்டதால், ஆதவ் அர்ஜுனாவிடம் கூப்பிட்டு பேசுகிறார். அவர் தொடர சொன்னதால் விஜய் மீண்டும் பேசுகிறார். அந்த இடத்திற்கு வந்தது செந்தில் பாலாஜியை அட்டாக் செய்வதற்குதான். அந்த பாட்டு பாடி முடித்தபின்னர் கிளம்பிடலாம் என கிளம்பி விடுகிறார்கள். ஒன்றரை மணி நேரத்தில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு போய்விட்டார். அவர் 7.33 மணிக்கு அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார். அங்கு நேரலையில் இருந்த தொலைக்காட்சி நிருபர்கள் யாரும், இன்றைக்கு சொல்லப்படுகிற சதி கோட்பாட்டை எதையும் சொல்லவில்லை.
விஜய் கூட்டத்தில் இருந்தவர்கள் முதுகில் பிளேடு போட்டார்கள், 2 முட்டிக் கைகளையும் வைத்து தள்ளினார்கள். திட்டமிட்ட ஒரு நபரால் ஒரு கும்பல் அனுப்பப்பட்டது. ஜுசில் மயக்க மருந்து கலந்துவிட்டார்கள். 5 நிமிடத்தில் எப்படி செந்தில் பாலாஜி அங்கே போனார் என்பவை இந்த சதி கோட்பாட்டில் சொல்லப்படுகிற விஷயங்களாகும். இதில் ஒன்றைக்கூட அங்கு நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள் சொல்லவில்லை. முதல் வீடியோ 10.30 மணிக்கு ரெட்பிக்சில் பெலிக்ஸ் போடுகிறார். விஜய் 7.33க்கு பேசி முடித்த உடன், இறப்பு செய்திகள் வர தொடங்குகின்றன. அப்போது பெலிக்சிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்படுகிறது. இது போன்ற கூட்டம் கூடுகிறபோது, கூட்டநெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பெலிக்ஸ் சொல்கிறார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல சதி கோட்பாட்டை அவர் டெவலெப் செய்கிறார். செட்அப் பண்ணி ஆட்களை உள்ளே அனுப்பினார்களா?, செந்தில் பாலாஜி எப்படி உள்ளே வந்தார்? சி.எம்க்கு எப்படி தகவல் கிடைத்தது? இது விஜய்க்கு தெரிந்திருக்காதா? அவர் ஏன் கிளாம்பினார்? ஒரு சதிவலையை பின்னணி விஜயை கொண்டுவந்து சிக்க வைத்துவிட்டார்கள் என்கிற கோட்பாட்டை 10.30 மணிக்கு எடிட் செய்து போடுகிறார்கள். விஜய் உள்ளிட்டோருக்கு இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாதபோது,
பெலிக்ஸ் ஒரு குருநாதர் போன்று சதி கோட்பாட்டை பரவவிடுகிறார். அப்போதை பிடித்துக்கொண்டு கரையேறி விடலாம் என அவர்கள் வைத்திருக்கும் சமூக ஊடக பிரிவு, சினிமா கதை டிஸ்கஷன் போன்று சீன்களை உருவாக்கி சதிக் கோட்பாட்டை விரிவாக்குகிறார்கள். அப்படி டெவெலப் செய்யப்பட்ட ஸ்டோரிகளை தவெக தொண்டர்களுக்கு அனுப்பி சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.
அண்ணாமலை முதலில் அரசு உரிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதன் பிறகு சதி கோட்பாட்டை புரிந்துகொண்டு சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொல்கிறார். முதலில் நடுநிலையாக பேசிய எடப்பாடி, அதற்கு பிறகு சதி கோட்பாட்டை வழிமொழிவது போல பேச தொடங்கினார். திமுகவுக்கு எதிராக சதி கோட்பாட்டை சுற்றி, அதை வலுப்படுத்தும் விதமாக ஒரு அணி சேர்க்கை ஏற்பட்டுவிட்டது. மாநில அரசின் சிபிசிஐடி விசாரித்தால் அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். அதில் இருந்து தப்பிக்க சிபிஐ விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்தனர். அப்படி சிபிஐ விசாரணை வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை சொல்ல வேண்டும். அவர்கள் இந்த சதி கோட்பாட்டின் தொகுப்பை காரணமாக சொல்லி உள்ளனர். தவெக வழக்கறிஞர் அறிவழகன் மனுத்தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகிறபோது, மனுவில் உள்ளவற்றை சொல்கிறார். அன்று இரவு தான், பெலிக்ஸ் பெட்டிஷனில் உள்ளவை உண்மை என்பதற்கான நேரட்டிவை செட் செய்கிறார். இந்த 72 மணி நேரத்தில் இதுதான் நடைபெற்றது. பட்டினப்பாக்கத்திலோ, நீலாங்கரையிலோ ஸ்கிரிப்ட் தயாராகிறது. இதை ஒரு திரைக்கதை உருவாக்குவது போல உருவாக்கியுள்ளனர்.

டாக்டர் ஷாலினி, கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜி வந்தது, முதலமைச்சர் தலையிட்டு அமைச்சர்கள், மருத்துவர்களை கரூருக்கு அனுப்பியது மிகவும் அற்பத்தனமானது என்று சொல்கிறார். இரவு நேரத்தில் எப்படி பிரேத பரிசோதனை செய்யலாம் என்று எவிடன்ஸ் கதிர் கேட்கிறார். 2021 நவம்பர் 15ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி செய்யலாம் என தெரிவித்துள்ளது. ஷாலினி மருத்துவர் என்பதால் அவரால் நேரடியாக சதிக் கோட்பாட்டை பேச முடியாது. அப்போது சதிக் கோட்பாட்டிற்கு பக்கவாத்தியம் போல வாசிக்கிறார். முதலமைச்சர் செல்கிறபோது ஊடகங்களை வரக்கூடாது என்று சொன்னால் அந்த சந்தேகத்திற்குரிய நடவடிக்கையாக இருக்கும். கட்சிகள் கூட்டம் நடத்தினால், அதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சிகள் தான் செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் தருகிறார்கள் என்று ஷாலினி சொல்கிறார். மாநாட்டு பொறுப்பாளர்கள் தான் தண்ணீர், உணவு போன்ற வசதிகளை செய்து தர வேண்டும். அல்லது ஷாலினி சொல்வது போல எந்த ஊரில் அரசியல் கட்சி மாநாட்டிற்கு அரசு செய்கிறது என்று சொல்ல வேண்டும். ஆனால் உலகம் அப்படி இயங்குது அல்ல.
மருத்துவர் ஷாலினியின் பேச்சு ஒரு விஜய் ரசிகருடைய பேச்சு போன்றுதான் உள்ளது. முதலாவது பாதிக்கப்பட்டவர்கள் அந்த மக்கள். அந்த மக்களை அவர் சந்தித்து ஆறுதல் எதுவும் கூறவில்லை. விஜய் அங்கிருந்து போய்விட்டார். ஆனால் விஜய்க்கு போலீஸ் சொன்னதால் தான் அவர் சென்னை போனார் என்று மருத்துவர் ஷாலினி சொல்கிறார். ஷாலினி தன்னை பெரியாரிய வாதி என்று சொல்கிறார். ஆனால் விஜயை ஒரு மேய்ப்பர் என்று சொல்கிறார். மக்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் மந்தைக்கு ஒரு மேய்ப்பர் வேண்டும் என்று சொல்கிறார். பெலிக்ஸ் சொன்ன சதி கோட்பாட்டை எந்த ஊடகங்களும் ஆமோதிக்கல்லை. பெலிக்ஸ் இந்த சதிக் கோட்பாட்டை உருவாக்கியவர். அதை ஒரு மருத்துவராக எப்படி ஷாலினி ஏற்றுக்கொண்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.