சென்னை மணலியில் ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் வழங்கப்படுவதாகவும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மணலி பெட்ரோலிய நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாகவும், உள்ளூர் இளைஞர்களை புறக்கணிப்பபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து, திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிசிஎல் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 8,000 வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளதாகவும், மணலி, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் இளைஞர்களில் 500க்கும் மேற்பட்டோர் வேலைக்காக பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை ஒருவருக்கும் வேலை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஒரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறி அலை கழித்து வந்தத நிலையில்,எந்த முடிவும் எடுக்கப்படாததால் திருவெற்றியூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி சிபிசிஎல் நிறுவனம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனை அறிந்த மணலி மற்றும் சாத்தங்காடு போலீசார் அப்பகுதியில் ஏராளமான குவிக்கப்பட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபடாத அளவிற்கு கைது நடவடிக்கை மேற்கொன்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒன்றிய அரசு நிறுவனத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதை வலியுறுத்தி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிபிசிஎல் நிறுவனம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் – அன்புமணிவலியுறுத்தல்