தவெகவில் புஸ்ஸி ஆனந்துக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் தான் தொடர்பு உள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதால் கட்சியே படுத்துவிட்டது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

கருர் துயர சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கணக்குகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் துயர சம்பவம் தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகளை மாற்றி விட்டதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. டிடிவி தினகரன், விஜய் அரசியலுக்கு தகுதி அற்றவர், திமுக அரசின் மீது தவறு இல்லை என்று சொல்லி, திமுக ஆப்ஷனை திறந்து வைத்திருப்பதாக தெரிகிறது. லைட்டாக பழைய விரோதத்தை எல்லாம் விட்டதாகவும் தெரிகிறது. திமுகவுக்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இல்லாத ஒரு அணியை தான் டிடிவி தினகரன் கட்டமைக்கிற வேலையில் தான் தனது அனுபவத்தை பயன்படுத்தி ஈடுபடுவார். இருந்தபோதும் தினகரனின் கரூர் விவகாரம் தொடர்பான பேட்டி அவர் திமுக ஆப்ஷனை ஓபன் செய்திருப்பதாக தெரிகிறது.
திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது. ஓபிஎஸ், ராமதாஸ், பிரேமலதா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒரு வகையில் திமுகவுக்கு கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கின்றனர். 45 சதவீதம் வாக்குகளை மூன்று தேர்தல்களில் பெற்ற அணி திமுக கூட்டணி. பலரும் ஆளுங்கட்சி எதிர்ப்பு என்கிற வாதத்தை வைக்கிறார்கள். அது வெறும் வாதம்தான். ஆனால் உண்மை நிலவரம் அது அல்ல.
அதேவேளையில் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு யார் ஆப்ஷனை ஓபன் செய்திருக்கிறார்கள்? விஜய், எங்கு கூட்டணி வாய்ப்பை ஒபன் செய்திருக்கிறார். அவர் மீது பாஜகவின் ஒரு தரப்பினர் போய் விழுகிறார்கள். ஹெச்.ராஜா, தமிழிசை போன்றவர்கள் அப்படி செய்கிறார்கள். அண்ணாமலை போன்று விஜய் பக்கம் விழுந்தவர்கள் தற்போது சுதாரித்துக்கொண்டு சம்பவத்திற்கு அதிகாரிகள், தவெக என இருவரும் பொறுப்பு என்கிறார்கள். விஜய் மீது வழக்குப்போட முடியாது என்றாலும், பழைய நிலைப்பாட்டில் இருந்து அண்ணாமலை மாறிவிட்டார். இதில் அணி மாற்றத்திற்கான சாத்தியங்கள் ஏற்படவில்லை.
விஜய் கடைசி நேரத்தில் என்டிஏ கூட்டணிக்கு வரலாம் என்கிறார்கள். பலம் நிரூபிக்காத, கையில் வராத வாக்குகளை எப்படி டிரான்ஸ்பர் செய்ய முடியும்? எடப்பாடி விஜய்க்கு சீட்டு கொடுக்கிறார் என்றால்? அதற்கு காரணம் விஜய் தனித்து நின்றால், எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தி விடுவார் என்று அச்சப்பட்டு கொடுக்கிறார். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறபோதும், தவெகவினர் எடப்பாடி பழனிசாமியை தங்கள் கொடிகளில் போடுகிறார்கள். அப்போது தவெக தனித்து நின்றால் அதிமுக காலியாகிவிடும் என்று பயப்படுகிறார்கள். அதனால் விஜயை தன்வசப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.
விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை போட்டால் அதனால் பாதிக்கப்பட போவது எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி தனித்து நின்று பாதிக்கப்படுவது ஸ்டாலினுக்கும் நல்லது. விஜய், எடப்பாடியுடன் போய் சேர்ந்தால் வாக்குகள் கிடைப்பதை விட ஒரு பிச்சார பீரங்கியாக செயல்படுவார். இதனால் புஸ்ஸி ஆனந்த் போன்ற தவெகவினரை முதலமைச்சர் ஓடவிடுகிறார். அவர்களிடம் அமைப்பு இல்லை என்று காட்டுகிறார். ஒருவேளை அவர்களை கைது செய்துவிட்டால், விஜய் பலவீனப்பட்டு அதிமுக உடன் கூட்டணிக்கு சென்றுவிடுவார். எனவே விஜய் தனித்து நின்றால் அது எடப்பாடியை பாதிக்கும் என்று மு.க.ஸ்டாலின் யோசிக்கிறார்.
ஜான் ஆரோக்கியசாமி மதுரை விஜய், உசிலம்பட்டி விஜய் என்று சொன்னார். ஆனால் புஸ்ஸி ஆனந்த் இல்லாவிட்டால் கட்சியில் எதுவும் இல்லை. அவருக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் தான் தொடர்பு உள்ளது. விஜய்க்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுதான் தவெகவில் உள்ள பிரச்சினை. கட்சி தலைமையிடம் யாருக்கும் தொடர்பு இல்லாததால் எல்லோரும் பாதாளத்தில் படுத்துவிட்டார்கள். நம்மை கைது செய்யப்படுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள்.
அரசியல் களம் என்பது தலைவருக்கும், மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய செயலாளருக்கும் தொடர்பு இருக்க வேண்டும். விஜயகாந்திடம் அந்த பண்பு இருந்தததால் தான் தலைவராக இருந்தார். விஜயிடம் அந்த பண்பு இல்லை. அதனால் உங்களுடைய ஆட்கள் எல்லாம் அதிமுக, திமுகவிடம் சென்றுவிட்டார்கள். விஜய் நேரடியாக கட்சி நிர்வாகிகளிடம் பேசி அரசியல் செய்திருந்தால், ஒருவரும் அவரை விட்டு போயிருக்க மாட்டார்கள். இதுதான் விஜயிடம் இருக்கும் மைனஸ் ஆகும்.
தற்போது விஜய் கரூர் விவகாரத்தை மறந்துவிட்டு தேர்தல் அறிவித்த் பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார் என்றால், அவருக்கு எதிர்காலம் உள்ளது. அல்லது விஜய் இப்படியே மௌனமாக இருப்பார் என்றால்? உங்களுடைய பிரச்சார பலத்திற்காக எப்பாடி பழனிசாமி 10 அல்லது 20 இடங்களை கொடுத்துவிடுவார். தவெகவினர் மனவலிமை இன்றி ஓட்டம்பிடித்ததற்கு காரணம் விஜய்தான். உங்களுக்கும் தொண்டர்களுக்கும் தொடர்பு இல்லாதது தான் காரணம். இவர்களை வைத்து நீங்கள் எப்படி அரசியல் நடத்த முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.