
2025ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல்பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் இந்த நோபல் பரிசு மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்களில் விவரங்களை தேர்வுக்குழு வெளியிட்டு வருகிறது.

அதன்படி தற்போது வேதியலுக்கான நோபல்பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமர் எம்.யாஹி ஆகியோருக்கு 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. உலோகம் – கரிமம் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக மூவருக்கும் இந்த பரிசு வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.