இன்றைய (அக் 11) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. தங்கம் விலை வரலாறு காணாதபுதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எதிற்பார்க்கப்படுகிறது. இல்லாதபட்டத்தில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் இந்த விலையை கண்டிப்பாக எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.
சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி ரூ.3 அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.187க்கும், 1 கிலோ ரூ.1,87,000க்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உச்சம் தொட்டுள்ளது. முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தைபோல் வெள்ளியின் மீது விழுந்ததே இதற்கு காரணமாம்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் பலனளித்தது – பதுச்சேரியில் வாகன விற்பனை 35% விற்பனை உயர்வு!


