டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு குறித்த விவகாரத்தில் பிரதமரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “பெண் பத்திரிகையாளர்களை பொது மன்றத்தில் இருந்து விலக்க அனுமதிக்கும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மிகவும் பலவீனமானவர் என்று நீங்கள் கூறுகிறீர்களா?.
நமது நாட்டில், பெண்களுக்கு எல்லா இடங்களிலும் சமமாகப் பங்கேற்க உரிமை உண்டு. இப்படியான பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது நீங்கள் அமைதியாக வெளிப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளாா்.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் நெருங்கி வருவதைக் கண்டு பாகிஸ்தானும் ராகுல் காந்தியும் பதறுகிறார்கள். மீண்டும் ராகுல் காந்தி போலி செய்திகளைப் பரப்பி பாகிஸ்தானுக்காகப் பேசுகிறாா் எனக் கூறியுள்ளாா்.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது அந்த நாட்டின் உள்நாட்டுக் கொள்கை. இதில் இந்திய அரசுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!