spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு... பயணிகள் அதிர்ச்சி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு… பயணிகள் அதிர்ச்சி!

-

- Advertisement -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai omni bus

we-r-hiring

நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள், பண்டிகையை கொண்டாட தங்களது ஊர்களுக்கு செல்ல உள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு வழக்கமாக ரூ.1,400 முதல் ரூ.1,800 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். தற்போது குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்வதற்கு வழக்கமான நாட்களில் ரூ.800 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்படும். தற்போது அதிகபட்சமாக ரூ.3,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான நாட்களில் ரூ.700 முதல் ரூ.1,100 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். தற்போது அதிகபட்சமாக ரூ.4,100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு வழக்கமான நாட்களில் ரூ.900 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை ஒட்டி ரூ.4,000 அதிகபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு வழக்கமான நாட்களில் 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது அதிகபட்சமாக 3,600 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கட்டண உயர்வு தொடர்பாக எச்சரித்து ஆய்வு மேற்கொண்டாலும், இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. எனவே தமிழக அரசு ஆம்னி பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

MUST READ