ரவுடி குணா கொலை செய்யப்பட்ட வழக்கில் தனுஷ் என்ற நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.அடையாறு இந்திரா நகர் அருகே ரவுடி குணா என்கிற குணசேகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனுஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளாா். தனுஷ் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட தனுஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு இளம் வழக்கறிஞர் கௌதம் என்பவரை குணசேகரன் கொலை செய்ததற்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.
நீலாங்கரையைச் சேர்ந்த ரோகித் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த குட்டி ஆகியோர் ரவுடி குணசேகரனின் நடமாட்டத்தை கண்காணித்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனா். கைது செய்யப்பட்ட தனுஷ் இடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தலைமறைவாக உள்ள மற்ற ஏழு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
