விஜய் பட வில்லன் இட்லி கடை படத்தை பாராட்டியுள்ளார்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் ‘இட்லி கடை’. இந்த படம் தனுஷின் 52 ஆவது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிட்டது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இதில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இட்லி கடையை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜயின் ‘துப்பாக்கி’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்த வித்யூத் ஜம்வால் இட்லி கடை படத்தை பாராட்டியுள்ளார். அதன்படி அவர், “நான் சமீபத்தில் இட்லி கடை படத்தை பார்த்தேன். அது என்னுடைய ஃபேவரைட் படமாகிவிட்டது. நீங்களும் இந்த படத்தை பார்த்து ரசியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.