பருவமழைக் காலத்தை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், செய்தியாளர்களிடம் பேசியபோது, ”மழைக் காலங்களில் அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நீர் தேங்காத வகையில் கட்டமைப்பை உறுதிசெய்ய மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், அவசர நிலைகளில் பயன்படுத்த மாற்று ஏற்பாடாக உள்ள ஜெனரேட்டர்கள் முழுமையாக செயல்படும் நிலையில் பழுதின்றி பராமரிக்கவும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

பருவமழை காலத்தில் தீவிர பாதிப்புகளுக்குளாகக்கூடிய நோயாளிகள் மற்றம் பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சோமசுந்தரம் தெரிவித்தார்.
இவ்வாறு, மழைக்காலத்திலும் மக்களின் நலனை பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க் திமுக நெட்வொர்க் தான்- துணை முதல்வா்


