spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!

உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரை தனி அறையில் தனித்தனியாக சந்தித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!

we-r-hiring

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற விஜயின் அரசியல் பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நோக்கில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் சிறப்பு ஏற்பாடுகளுடன் இன்று அவர்களை சந்தித்தார்.

கரூரில் இருந்து பேருந்து மூலம் மகாபலிபுரம் அடுத்துள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு  அழைத்துவரப்பட்டு அவர்களை தவெக கட்சியின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளாா்.

ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனி அறையில், தனித்தனியாக சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அறிந்து அவர்களிடம் பேசினார். இது தொடர்பாக ஒரு குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக  பேசும்பொழுது அவர்கள் தெரிவிக்கையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுதும், கூட்ட நெரிசலில் சிக்கி அவர்களது குழந்தைகளை இழந்த ஒரு பெற்றோர் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார்.

ஆறுதல் தெரிவிப்பதற்காக கரூரில் இருந்து அழைத்து வந்த அனைத்து குடும்பத்தாரிடமும் “உங்களை இங்கு அழைத்து வந்ததற்கு மன்னியுங்கள்; ஒருநாள் கரூர் வந்து நேரில் சந்திப்பேன்”உங்கள் குடும்பத்தில் ஒருவராக என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன் உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் நான் செய்து தருவேன் என்று உறுதியளித்தாா்.  வேலைவாய்ப்பு,  திருமணம், கல்வி என குடும்பத்தினர் கொடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதி தெரிவித்துள்ளார். கட்சித் தரப்பில் இருந்து கிடைத்த தகவலின்படி, விஜய் அவர்களின் இந்த சந்திப்புக்குப் பிறகே வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம்!! வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம்

MUST READ