spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமோடியின் பேச்சு 'ஆகாயப் புளுகு'….தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்தும் அரசியல்… திருமாவளவன் கண்டனம்

மோடியின் பேச்சு ‘ஆகாயப் புளுகு’….தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்தும் அரசியல்… திருமாவளவன் கண்டனம்

-

- Advertisement -

சென்னையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,மோடியின் பேச்சு 'ஆகாயப் புளுகு'….தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்தும் அரசியல்… திருமாவளவன் கண்டனம்​“பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் திமுகவால் துன்புறுத்தப்படுவதாகப் பேசியதற்கு, விசிக தலைவர் திருமாவளவன்  கண்டனம் தெரிவித்தார் “தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்விதப் பிரச்சினையும் இன்றிப் பணியாற்றி வருகின்றனர் என்றும் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இருக்கும்போது, தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி இத்தகைய ‘அண்டப்புளுகை ஆகாச புளுகை’ (பெரும் பொய்யை) பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று  கூறினார். தமிழ்நாட்டில் பீகாரைச் சார்ந்தவர்கள் புகார் அளித்ததற்கோ அல்லது வழக்குகள் பதிவானதற்கோ ஆதாரம் இருக்கிறதா என பிரதமர் காட்ட வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினாா்.

திமுகவை விமர்சித்தால் தமிழர்களை விமர்சிப்பதாக திமுக சித்திருக்கிறது என்ற தமிழிசை சௌந்தரராஜின் கருத்துக்கு பதில் அளித்த தொல்.திருமாவளவன், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐ விமர்சித்தால், ஒட்டுமொத்த  இந்துக்களின் விரோதிகள் என்று சித்தரிப்பது, ஒடிசாவில் தமிழர்களை ஆட்சி செய்ய அனுமதிப்பீர்களா எனக் கேள்வி எழுப்புவது, தமிழ்நாட்டில் தமிழர் பெருமை பேசுவது என பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் பிளவுபடுத்தும் நோக்கத்துடனே உள்ளதாகவும், இது மோதலை உருவாக்கும் ஆபத்தான அணுகுமுறை என்று தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.​

we-r-hiring

​சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) மூலம் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு விசிக தனது எதிர்ப்பைத் தெரிவித்தது என்றும் எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராக திமுகவும், விசிகவும் தொடுத்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வழக்கு முடியும் வரை இதைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது எனத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்திருப்பதாகக் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

“தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாறியிருக்கிறது என்று கூறிய அவர் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு உத்தியாகத்தான் இந்த நடவடிக்கையைப் பயன்படுத்துகிறார்கள்” என்று  விமர்சித்தார். நவம்பர் 2 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த ‘ஆபத்தான நடவடிக்கை’க்கு எதிராக ஒத்துழைக்க வேண்டும் என்று  தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதால் தான் இந்தியா கூட்டணி தோற்கிறது என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , ​இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் திமுக முக்கியப் பங்கு வகித்தது என்றும், கூட்டணியில் திமுகவின் இருப்பு பலவீனம் அல்ல, பலமே என்று  தொல்.திருமாவளவன் தெரிவித்தார். மேலும், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தி.மு.க. அரசின் காலை உணவுத் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருப்பது, திராவிட மாடல் ஆட்சியை பி.ஜே.பி.யும் பின்பற்றுகிறது என்பதற்குச் சான்றாகும்“ என்று தொல்.திருமாவளவன் கூறினாா்.

தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேச்சு கண்டனத்திற்குரியது – மாணிக்க தாகூர் எம்.பி

MUST READ