spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவீடுகளில் ஆள் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல - வேல்முருகன் காட்டம்..!!

வீடுகளில் ஆள் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல – வேல்முருகன் காட்டம்..!!

-

- Advertisement -
தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில் அவர்கள் வீடுகளில் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஆவடி கண்ணப்பாளையத்தில் தமிழ் சைவ பேரவை மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா, அருள் நிறை தமிழ் சைவப்பெருமான் திருக்கோவிலில் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் எட்மண்ட் ஜெயந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அக்கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவாக தலைவர் வேல்முருகன், “தமிழ்நாட்டில் ரெடிமேட் தேன்நிலவு, ஹேப்பி ஸ்ட்ரீட் உள்ளிட்ட பெண்களுக்கு ஆபாச ரீதியாக தொந்தரவுகளை கொடுத்த எத்தனையோ நிகழ்ச்சிகளை நான் நிறுத்தியுள்ளேன். அந்த வகையில் பிக்பாஸையும் நிறுத்துவேன். எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை பார்த்து திமுக அஞ்சவில்லை. எஸ் ஐ ஆர் என்ற பெயரில் மத ரீதியாக இன ரீதியாக மக்களின் வாக்குரிமையை மிதக்கும் பாஜக அரசின் சூழ்ச்சிக்கு எதிராக அது அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துகிறது.

we-r-hiring

மேலும், கலையரசி நடராஜன் அவர்களை அறங்காவலராகக் கொண்டு உலகிலேயே ராஜராஜ சோழனை தெய்வமாக வழிபடுகின்ற இடத்திற்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இடத்தின் வரலாறு தெரியாமல் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அம்மையார் இந்த இடத்தை வாங்கி மண்மேடுகளை செய்த போது சிவன் சிலை ஒன்று கிடைத்தது. அந்த சிலையை வைத்துக்கொண்டு சிவனடியார்களுடன் சேர்ந்து ஒரு சமூகத் தொண்டை செய்து வருகிறார். ஆனால் இந்த இடத்திற்கு பட்டா கூறி விண்ணப்பித்தபோது அரசு நீர்நிலை இடம் எனக்கூறி பட்டா வழங்க மறுத்துள்ளது. இருப்பினும் பக்கத்தில் இருக்கும் அரசு கட்டிடம் மற்றும் ஐந்தடி இடைவெளியில் இருக்கும் மற்றொரு கட்டடத்திற்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த இடம் மட்டும் எப்படி பட்டா வழங்க முடியாது இடமாக இருக்கும். நமது முன்னோரான ராஜராஜ சோழனை வழிபடும் இடமாக இருக்கும் இந்த இடத்திற்கு பட்டா அடிப்படை வசதிகளை அரசின் அரசு அதிகாரிகளும் திருவள்ளூர் ஆட்சியிலும் ஏற்படுத்தி தர கோரிக்கை வைப்பேன். அதேபோன்று ராஜராஜ சோழனை வழிபட வரும் பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு சிறிய கழிவறை கட்ட அனுமதிக்க வேண்டும்.

எஸ்.ஐ.ஆர் - SIR

எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்த முதலமைச்சர் தொலைபேசி வாயிலாக அழைத்தார். நான் சமூக சீர்கேடாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து அதன் அரங்கத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த உள்ளதால் காஞ்சிபுரம் அருகாமையில் உள்ள இடத்தை போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு கேட்டேன். அதன்படி முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் என்னை எஸ்.ஐ.ஆர்க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டதால் நாளை காஞ்சிபுரத்தில் எஸ் ஐ ஆர் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வேன். எஸ் ஐ ஆர் திருத்தம் என்பது பூர்வீக குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் 14 ஆவணங்களை கேட்க உள்ளனர். அந்த ஆவணங்கள் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என்கிறார்கள். உதாரணத்திற்கு வாக்காளர்களின் தந்தையுடைய பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். தற்போதைய தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறைகள் இருப்பவர்களுக்கு பிறப்பு சான்றிதழ்களை எம்எல்ஏவாகிய என்னால் கூட எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் சாமானிய மக்கள் எப்படி இருப்பார்கள்.

அதுமட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் உள்ளனர். அவர்களுக்கு இங்கு வாக்குரிமை உள்ளது. ஆனால் தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில் அவர்கள் வீடுகளில் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல. எஸ்.ஐ.ஆர் முறை இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன். அதனால் ஏற்கனவே இருக்கும் எஸ் ஆர் முறைப்படியே வாக்காளர் திருத்தம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பிக் பாஸ் நடத்தும் விஜய் சேதுபதியும் அதில் பங்கேற்றும் நபர்களும் எனக்கு விரோதமானவர்கள் அல்ல. ஆபாசமான மற்றும் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருப்பதால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடத்துகிறேன். இது தொடர்பாக முதலமைச்சரிடம் கோரிக்கையை முன் வைத்துள்ளேன். இதுவரை வந்து பிக் பாஸ் சீசன்களிலேயே தற்போது எடுக்கப்படும் பிக் பாஸ் தான் மிகவும் அவசரமாக உள்ளது. கர்நாடகாவில் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி கேரளா மற்றும் ஆந்திராவில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டு பின்னரே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போன்று தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

 

MUST READ