spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகுறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

-

- Advertisement -

இன்றைய (நவ.8) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

we-r-hiring

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் சிறு உயர்வைக் கண்டுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.11,300க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்க விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் சற்றே குறைந்திருந்த தங்கம், வார இறுதி வர்த்தகத்தில் மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது. தற்போது தங்கம் ஒரு அவுன்சுக்கு 17 டாலர் உயர்ந்து 4,001 டாலராக விலைபேற்றுள்ளது.

இதன் விளைவாக, இந்திய சந்தையிலும் தங்க விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். சீன மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிப்பதும், இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே நேரத்தில், வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.165 என்ற விலையில் நிலைத்துள்ளது.

‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் இந்த தேதியில் தானா?

MUST READ