தேர்தல் அரசியலுக்காக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளாா்.
சென்னை தங்கசாலையில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாடட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தல் ஆணையம் பாஜகவின் முழு கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. சுதந்திரமாக செயல்படவில்லை, ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் தான் தேர்தல் ஆணையத்தில் ஆணையர்களாக நியமிக்கப்ட்டுள்ளனர் என தெரிவித்துள்ளாா்.

மேலும், நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்ற சூழல் இல்லை, உச்ச நீதிமன்றத்தை கூட தாங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவர்கள் பெற்ற தீர்ப்பு ஒரு சான்றாகும். இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது என்றாா்.
கள்ள ஓட்டு போட முடியாது என்பதற்காகத்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ தி.மு.க எதிர்கிறது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்தான கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன்,
”அதிமுகவின் தலைவராக இருந்து இந்த கருத்தை சொல்கிறாரா அல்லது பாஜக பிரதிநிதியாக இருந்து இந்த கருத்தை சொல்கிறாரா என்ற குழப்பம் உருவாகிறது. தேர்தல் அரசியலுக்காக தன்னுடைய சுயத்தை இழக்கும் பரிதாப நிலைக்கு அ.தி.மு.க தள்ளப்பட்டுள்ளதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளாா்.”
பாஜகவின் வாக்கு திருட்டு வியூகம்!! நப்பாசையில் SIR-ஐ ஆதரிக்கும் பழனிசாமி- அமைச்சர் ரகுபதி விமர்சனம்


