பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தபோதும், அங்குள்ள களநிலவரம் பாஜகவுக்கு எதிராக உள்ளதாகவும், எனவே அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கருத்துக்கணிப்புகளின் உள் அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- பீகார் தேர்தல் களத்தில் வித்தியாசம் நேரடியாக தெரிந்தது. ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு என்று ஒரு ஆதரவு கூட்டம் இருக்கிறது. தலித்துகளில் ஒரு பிரிவு அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். மற்றவர்கள் காங்கிரஸ், தேஜஸ்விக்கு வாக்களிக்கின்றனர். வாக்குகள் சாதிகள் அடிப்படையில் பிரிந்துள்ளது. பாஜக இந்துத்துவா பிரச்சாரம் மூலம் மேல் சாதியினர் மற்றும் இடை சாதியினரின் வாக்குகளை பெறுகிறார்கள். வாக்கு திருட்டு விவகாரம் காரணமாக பாஜகவினர் செல்கிற இடங்களில் எல்லாம் மக்கள் அடித்து விரட்டினார்கள். குறிப்பாக 2ஆம் கட்ட தேர்தலில் பாஜக ஒட்டுமொத்தமாக காலியாகிவிட்டது. வடமாநில மக்களுக்கு அங்கு நடைபெறும் முறைகேடுகள் எல்லாம் தெரிகிறது. எனவே பாஜக முறைகேடு செய்து வெற்றி பெறலாம் என நினைத்தார்கள் என்றால்? மக்கள் அவர்களை காலி செய்துவிடுவார்கள்.

பீகாரில் 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் நேரத்தில், டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பாஜகவை வீழ்ச்சிக்கான ஆரம்ப புள்ளியாக பீகார் இருக்கப் போகிறது. வடமாநிலங்களில் பாஜகயை யார் நம்பினார்களோ? அவர்களை யார் வளர்த்து விட்டனரோ அவர்கள் தான், பாஜகவை அழிக்கப் போகிறார்கள். அது பீகாரில் இருந்து கூட தொடங்கலாம். பீகார் அமைச்சரை பொதுமக்கள் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள். இது பாஜகவின் அழிவின் ஆரம்பமாகும். ஆசாதுதீன் ஓவைசி எப்போதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாளராக இருந்துள்ளார். பாஜகவுக்கு சாதகமாக தான் அவர் செயல்படுவார். இஸ்லாமியர்களின் வாக்குகளை தனியாக பிரித்து, பாஜகவை வெற்றிபெற வைத்துவிடுவார். ஆனால் கடந்த முறை போன்று, இம்முறை அவருக்கு இஸ்லாமியர்கள் பெரிய அளவில் வாக்களிக்க மாட்டார்கள். பல முறை அவரை நம்பி ஏமாந்துவிட்டனர். எனவே இம்முறை அவருக்கான வாக்குகள் சற்று குறைந்துவிடும். எனவே சீமான்ஞ்சல் பகுதியில் ஓரளவுக்கு ராகுல், தேஜஸ்விக்கு வாக்குகள் கிடைக்கும்.

ஊடகங்களுக்கு பாஜக பணம் கொடுத்து கருத்துக்கணிப்புகளை போடுகிறார்கள். எனவே அதில் பாஜக – நிதிஷ் கூட்டணி பெரும்பான்மை பெறும் என்று சொல்வார்கள். பிரசாந்த் கிஷோர் பின்னால் படித்தவர்கள், அஜிவுஜீவிகள் சென்றனர். கடையில் அவர்கள் எல்லாம் பாஜகவின் பக்கம் போய்விட்டனர். 5க்கும் மேற்பட்ட வாக்காளர்களே, பாஜகவிடம் சென்றுவிட்டனர். பாஜக, பிரசாந்த் கிஷோரை இறக்கியதன் நோக்கம் என்பது நிதிஷ்குமாரை காலி செய்வதாகும். நிதிஷ்குமார் போட்டியிடும் தொகுதிகளில், பிரசாந்த் கிஷோரை போட்டியிட செய்து, பாஜகவின் வாக்குகள் நிதிஷுக்கு செல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். பீகார் தேர்தலில் பாஜக – நிதிஷ் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் பட்சத்தில் மோடி அரசுக்கும் பிரச்சினை ஏற்படும். அதனால் தான் பீகார் தேர்தல் முடிவுகளை அனைவரும் உற்று நோக்குகிறார்கள். வரும் 14ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் அதை தீர்மானிக்கும். எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்களை நீக்கியபோதும், மக்கள் பெரிய அளவில் எதிரான மனநிலையில் உள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


