யூடியூபர் சவுக்கு சங்கர் தன் மீது பதியப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிகை ஒன்றாக இணைக்க கோாி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஒரே ஒரு பேட்டிக்காக பல்வேறு வழக்குகள் தன் மீது பதியப்பட்டு இருக்கின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும். தனித்தனியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரிக்கக் கூடாது என்றும் தனித்தனியாக குற்றப் பத்திரிகை ஒவ்வொரு வழக்கிலும் தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது என்றும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை அனைத்தும் இணைக்க கூறியிருந்தது ஆனால் இதுவரை ஒன்றாக இணைக்கப்படவில்லை என சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அனைத்து வழக்குகளுக்குமான குற்றப்பத்திரிக்கை ஒரே நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட போது, அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குற்றப்பத்திரிகைகள் அனைத்தும் ஒரே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என கேள்வி எழுப்பினா். சட்டத்துக்கு உட்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் சொன்னோமே தவிர குற்றப்பத்திரிகைகள் அனைத்தும் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என நாங்கள் தெரிவிக்கவில்லை. எனவே அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என சவுக்கு சங்கா் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்க முடியாது. சவுக்கு சங்கருக்கு எதிரான 15 வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என கூறி சவுக்கு சங்கர் சார்பில் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரே நீதிமன்றத்தில் வெவ்வேறு வழக்குகளில் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, சவுக்கு சங்கர் மனுவினையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


