spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அதிமதுரப் பொடி.... குடல் புண் முதல் இருமல் வரை ஒரே தீர்வு!

அதிமதுரப் பொடி…. குடல் புண் முதல் இருமல் வரை ஒரே தீர்வு!

-

- Advertisement -

அதிமதுரப் பொடியின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.அதிமதுரப் பொடி.... குடல் புண் முதல் இருமல் வரை ஒரே தீர்வு!

அதிமதுரம் என்பது ஒரு இயற்கையான மருந்து செடியாகும். இதிலிருந்து கிடைக்கும் பொடியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

1. அதிமதுரப் பொடி என்பது அசிடிட்டி, கேஸ்ட்ரிக், குடல் புண் ஆகிய பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.
2. இது உலர் இருமல், குரல் சரியில்லாமல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. அதாவது இந்த அதிமதுரப் பொடியை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிப்பதனால் குரல் இனிமையாகும்.அதிமதுரப் பொடி.... குடல் புண் முதல் இருமல் வரை ஒரே தீர்வு! 3. இது வயிற்றுக்குள் ஏற்பட்ட அல்சர் பிரச்சனைக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
4. இது தவிர உடல் சூடு காரணமாக உண்டாகும் வாய்ப்புண், சிறுநீர் எரிச்சல் ஆகியவற்றையும் குறைக்கிறது.
5. அடுத்தது சுவாசப் பாதைகளில் உள்ள சளி தடிமனாக இருக்கும் பட்சத்தில் அதனை கரைத்து வெளியேற்ற உதவுகிறது. எனவே அதிமதுரப் பொடியை பயன்படுத்துவதால் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யலாம்.
6. அதிமதுரப் பொடி முகப்பருக்களை சரி செய்யவும், தழும்புகளை குறைக்கவும், முகம் பொலிவாக இருப்பதற்கும் உதவுகிறது. ஆகையால் வாரத்திற்கு இரண்டு முறை இதனை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
அதிமதுரப் பொடி.... குடல் புண் முதல் இருமல் வரை ஒரே தீர்வு! 7. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
8. மேலும் இது புண்கள், வெடிப்புகள் போன்றவற்றை ஆற்றவும் பயன்படுகிறது.
9. செரிமான ஆரோக்கியத்திற்கும் இது நன்மை தரும்.

காலை மற்றும் இரவில் உணவுக்குப் பின் 5 கிராம் அளவில் வெந்நீருடன் கலந்து சாப்பிடலாம். இது தவிர பால் மற்றும் தேனுடனும் கலந்து சாப்பிடலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ