spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மூல நோய்க்கு தீர்வு தரும் ரோஜா இதழ்கள்!

மூல நோய்க்கு தீர்வு தரும் ரோஜா இதழ்கள்!

-

- Advertisement -

ரோஜா இதழ்கள் மூல நோய்க்கு தீர்வு தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மூல நோய்க்கு தீர்வு தரும் ரோஜா இதழ்கள்!

ரோஜா இதழ்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்றவை அடங்கியுள்ளது. இது பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. அதாவது ரோஜா இதழ்கள் பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது சருமத்தின் அழகை மேம்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மாதவிடாய் வலியை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும் செரிமான பிரச்சனைகள், உடல் சூடு, சளி, இருமல், புண்கள் போன்றவைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதே சமயம் இந்த ரோஜா இதழ்கள் மூல நோய்க்கும் தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது.மூல நோய்க்கு தீர்வு தரும் ரோஜா இதழ்கள்!

we-r-hiring
  1. அதாவது மூல நோய் உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வர விரைவில் நல்ல ரிசல்ட் கிடைக்குமாம்.
  2. அடுத்தது ரோஜா இதழ்களை நசுக்கி பசை போல ஆக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யலாம்.

இது மூலக்கட்டியின் அழற்சியை குறைத்து, எரிச்சலையும் குறைக்கிறது. மூல நோயின் முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. அந்த வகையில் ரோஜா இதழ் நீர், குடல் வலி பாதையை ஈரப்பதமாக வைத்துக் கொள்கிறது. ரோஜா இதழ்களை பயன்படுத்துவதால் உடலின் சூடு தணிந்து மலம் கடினமாகாமல் நன்றாக வெளியேறும்.மூல நோய்க்கு தீர்வு தரும் ரோஜா இதழ்கள்! இதில் உள்ள மென்மையான அனால்ஜெஸிக் தன்மை மூலப்பகுதியில் உள்ள எரிச்சல், அசௌகர்யம் ஆகியவற்றை தணிக்கும். இருப்பினும் இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ