spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி": ஈ.பி.எஸ்.ஸை சாடும் முதல்வர் ஸ்டாலின்!

பச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி”: ஈ.பி.எஸ்.ஸை சாடும் முதல்வர் ஸ்டாலின்!

-

- Advertisement -

டெல்டா விவசாயிகளின் நெல் கொள்முதல் விவகாரம்: அரசியல் களத்தில் அனல் பறக்கும் வார்த்தைப் போர். நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக அவரது ட்விட்டர் பக்கதில் விமர்சித்துள்ளார்.

பச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி": ஈ.பி.எஸ்.ஸை சாடும் முதல்வர் ஸ்டாலின்!டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, “சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?” என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.

we-r-hiring

நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என பழனிசாமி காத்திருக்கிறார்?

பச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி": ஈ.பி.எஸ்.ஸை சாடும் முதல்வர் ஸ்டாலின்!கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி , ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!

தற்குறிகள் கிடையாது… ஏன்டா தொட்டோம் என நினைச்சி ஃபீல் பன்ன போறீங்க… மக்கள் சந்திப்பில் சீறிய விஜய்!

MUST READ