spot_imgspot_img
Homeசெய்திகள்மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் சேமித்தால் ரூ. 7 லட்சம் ரிட்டன் கிடைக்கும்..!

மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் சேமித்தால் ரூ. 7 லட்சம் ரிட்டன் கிடைக்கும்..!

-

- Advertisement -

பாதுகாப்பான மற்றும் லாபகரமான சேமிப்பு திட்டத்தை தேடுபவா்கள் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் சேமித்தால், ரூ. 7 லட்சத்திற்கு மேல் கிடைக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. அத்தகைய ஒரு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது. இந்தப் பதிவில் அதன் விவரங்கள் குறித்து பார்ப்போம்.மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் சேமித்தால் ரூ. 7 லட்சம் ரிட்டன் கிடைக்கும்..! ஒவ்வொரு மாதமும் ஒரு நிரந்தரத் தொகையை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் பெற்றோருக்கு ஏற்றது தான் இந்த ”சுகன்யா சம்ரிதி யோஜனா“ (SSY).  ‘பேட்டி பச்சாவ், பேட்டி படாவோ’ திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேமிப்புத் திட்டம், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட அரசு உத்தரவாத திட்டம் ஆகும். பெண் குழந்தையின் தாய், தந்தை அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இவர்களில் யாரும் வேண்டுமானலும், இந்த கணக்கை எளிதாக திறக்க முடியும். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிர்ணயிக்கும் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதனால், நீண்ட காலத்தில் குழந்தையின் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்கு இது மிக பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு முறையாக கருதப்படுகிறது.

உதாரணத்திற்கு, உங்கள் மகளுக்கு தற்போது ஒரு வயது இருக்கும் பொழுது, நீங்கள் மாதம் ரூ. 2,000 சேமிப்பதாக வைத்தால், வருடத்திற்கு ரூ. 24,000 முதலீடு செய்ததாகும். இந்த முறையில் தொடர்ந்து 21 ஆண்டுகள் முதலீடு செய்தால், சுகன்யா சம்ரிதி யோஜனா மூலம் சுமார் ரூ. 11 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்த திட்டம் இந்திய அரசின் மிகவும் பாதுகாப்பானது என்பதோடு, வருமான வரி சட்டத்தின் கீழ் முழு வரிச் சலுகையும் கிடைக்கும். இதன் மூலம் பெண் குழந்தை சிறு வயதிலேயே தனது கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்கு உறுதியான சேமிப்பு அடித்தளம் அமைத்துக் கொள்ள முடியும்.

we-r-hiring

இந்தத் திட்டத்தில், நீங்கள் மாதம் ரூ.2,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், மொத்த முதலீடு ரூ.3,60,000 ஆக இருக்கும். நீங்கள் இந்தத் திட்டத்தை 2025 இல் தொடங்கினால், 2046 இல் திட்டம் முதிர்ச்சியடையும் போது, ​​உங்களுக்கு ரூ.7,48,412 வட்டி கிடைக்கும், மொத்தம் ரூ.11,08,412 கிடைக்கும். இத்திட்டத்திற்கு பெண் குழந்தை 10 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1,50,000 வரை ஆண்டுக்கு முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு, முதிர்வு காலம் ஆறு ஆண்டுகளில், அதாவது 21 ஆண்டுகளில் இருக்கும். 80 C இன் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது. தற்போது, ​​இந்தத் திட்டம் 8 சதவீத வட்டியை வழங்குகிறது.

தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை வஞ்சிப்பதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் – சு.வெங்கடேசன்

 

MUST READ