தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள 2 நாள் அரசுமுறை பயணமாக கோவை வந்த முதலமைச்சர், நேற்றைய தினம் கோவை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு செம்மொழி பூங்கா உள்ளிட்டவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதன் பின் 2ம் நாளான இன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெயராமபுரத்தில் சுதந்திர போராட்ட வீரரும், மாவீரன் தீரன் சின்னமலையின் படை தளபதியாக இருந்த மாவீரன் பொல்லானுக்கு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 4 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து ஓடாநிலை பகுதியில் அமைந்துள்ள கொங்கு நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் என போற்றப்படும் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 17-ம் தேதி பிறந்தநாளும், ஆடி 18 அன்று நினைவு நாள் ஆகிய 2 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வந்தாலும், தீரன் சின்னமலைக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் என தீரன் சின்னமலையின் வாரிசுதாரர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வளாக பகுதியில் 12 அடி உயர பீடத்தில் 12 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, ஈரோடு, சோலார் பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திடப்பணிகளை திறந்து வைத்து, 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள். முதல்வர் வருகையை ஒட்டி மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் கோவை சரக டிஐஜி சசிமோகன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கரூர் துயர சம்பவம்… கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சம்மன்… சிபிஐ அதிரடி!!


