spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் இலங்கையிலிருந்து மீட்பு…முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி…

தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் இலங்கையிலிருந்து மீட்பு…முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி…

-

- Advertisement -

டிட்வா புயல் எதிரொலி இலங்கை  நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழக சுற்றுலா பயணிகள் 29 பேர் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின், செந்தில் தொண்டைமானின் பெரு முயற்சியால் மீண்டு வந்துள்ளோம் என சென்னை திரும்பியவர்கள் விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளனா்.தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் இலங்கையிலிருந்து மீட்பு…முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி…இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் டிட்வா புயல் எதிரொலியாக பெய்த கன மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இரண்டு நாட்களாக பேருந்திலேயே தவித்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமானின் பெரு முயற்சியால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் 5 பேர் இலங்கையில் உள்ள உறவினர்கள் வீட்டிலேயே தங்கி உள்ளனர். மீதமுள்ள 24 பேர் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினர். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவர்கள் அளித்த பேட்டியில், “ஆறு நாள் சுற்றுலாவாக இலங்கைக்கு கடந்த 25 ஆம் தேதி விமானத்தில் சென்றோம். கொழும்புவில் இறங்கியதுமே கனமழை.

இருப்பினும் திரிகோணமலை சென்று அங்குள்ள சுற்றுலாத் தளங்களை பார்த்துவிட்டு நுவெரலியா நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். நுவரெலியாவை அடைய மூன்று கிலோமீட்டர் இருந்தபோது கனமழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டோம். இரண்டு நாட்கள் பேருந்திலயே சிக்கி தவித்தோம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பன், போண்டா என தங்களிடம் இருந்ததை எங்களுக்கு கொடுத்து உதவினர். உயிரோடு மீண்டு வருவோமா என்ற சந்தேகம் இருந்தது. எங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்தோம். அவர் இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டைமானை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

we-r-hiring

இதையடுத்து செந்தில் தொண்டைமான் தனது உதவியாளரை நேரடியாக அனுப்பி, இலங்கை போலீசாரையும் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை செந்தில் தொண்டைமான் எங்களை தொடர்பு கொண்டு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் செய்து கொடுத்தார். நாங்கள் 30-ம் தேதி காலை 6 மணிக்கு கொழும்புவில் இருந்து சென்னை திரும்புவதாக இருந்தது. கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு தான் நாங்கள் கொழும்புவை வந்தடைந்தோம். விமான நிறுவன அதிகாரிகள் அந்த  டிக்கெட்டுகள் செல்லாது.  முப்பதாயிரம் ரூபாய் செலுத்தி புதிய டிக்கெட்டுகள் எடுத்தால் தான் பயணம் செய்ய முடியும் என தெரிவித்து விட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் செந்தில் தொண்டைமான் ஆகியோர் விமான நிறுவன அதிகாரிகளிடம் பேசி அதே டிக்கெட்டுகளை கொண்டு எங்களை சென்னை திரும்ப ஏற்பாடு செய்தனர். மரணத்தின் வாசலுக்கு சென்ற எங்களை மீட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்“ என சண்முகசுந்தரம் சிதம்பரநாதன் செல்வி சிறுமி கனிஷ்கா கூறினா்.

மேலும், நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் சிக்கிய அப்பாவிகளை, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செந்தில் தொண்டைமான் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

கரூர் துயர வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

MUST READ