இந்து அறநிலையத்துறை பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறை உதவி ஆணையராக ராஜலட்சுமி பணிபுரிந்து வருகிறார். அவரது துறைக்கு கீழ் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் இருந்து வருகிறது. இந்நிலையில், ராஜலட்சுமி, கோவில் திருப்பணி தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரியுடன் கோவில் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது விவேக் சூர்யா என்பவர் ராஜலட்சுமி பணி செய்து கொண்டிருந்த அலுவலகத்தில், அத்துமீறி நுழைந்து ராஜலட்சுமிடம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை கொடுத்தார். கொடுக்கப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு அத்தாச்சி கொடுக்க வேண்டும் என சண்டையிட்டுள்ளார். ஆனால் அவ்வாறு கொடுக்க முடியாது சட்டத்தில் அதற்கு இடமில்லை என ராஜலட்சுமி எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.

இவ்வாறு ராஜலட்சுமி கூறிக் கொண்டிருந்த போது, விவேக் சூர்யா செல்போனில் அங்கு நடப்பது வீடியோவாக பதிவு செய்துள்ளார். அலுவலக விஷயங்கள் இல்லை செல்போனில் படம் பிடிக்கக் கூடாது என தெரிவித்த பிறகு, அங்கிருந்து ஓடி உள்ளார். அவர் அங்கிருந்து ஓடுவதை பார்த்து கோவில் ஸ்தானிகர் விஜயராகவன் என்பவரை நகத்தால் கீரியும், பெண் அதிகாரி ராஜலட்சுமியிடம் தனது வேட்டியை அவிழ்த்து, அருவருப்பாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


