spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு… ரெடியா இருங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு…

1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு… ரெடியா இருங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு…

-

- Advertisement -

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு… ரெடியா இருங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு…அமெரிக்க நாட்டை சேர்ந்த, ‘கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன்’ நிறுவனம், ‘ஸ்மார்ட் போன், லேப்டாப்’ போன்றவற்றிற்கு பயன்படும் கண்ணாடி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கார்னிங் நிறுவனம் மற்றும் இந்தியாவை சேர்ந்த, ‘ஆப்டிமஸ் இன்ப்ராகாம்’ ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான, ‘பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ்’ – பிக் டெக், தமிழகத்தில், தொழிற்சாலை அமைக்க, கடந்தாண்டு ஜனவரியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள பிள்ளைப்பாக்கம், ‘சிப்காட்’ தொழில் பூங்காவில், பிக் டெக் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க, 27 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.பணிகள் முழுமை அடைந்தததையொட்டி தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், MLA செல்வப்பெருந்தகை உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாக 840 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், மறைமுகமாக 1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மோசமான ஆளுநர் – வீரமணி விமர்சனம்

MUST READ