spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மோசமான ஆளுநர் – வீரமணி விமர்சனம்

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மோசமான ஆளுநர் – வீரமணி விமர்சனம்

-

- Advertisement -

இந்திய வரலாற்றிலேயே தமிழ்நாட்டின் மோசமான ஆளுநர் இவர் ஒருவர் தான் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளாா்.தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மோசமான ஆளுநர் – வீரமணி விமர்சனம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து முன்வைக்கும் கருத்துகள், மாநில அரசையும் மக்களையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் உள்ளன என குற்றம் சாட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

we-r-hiring

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஆளுநர் பதவி என்பது டெல்லி அரசாங்கத்தின் C.I.D.ஏஜெண்ட் என்றார்.

ஆளுநர் தமிழ்நாட்டை ஆள்வதைப் போல் நினைத்துக்கொண்டு போட்டி அரசை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், பலமுறை உச்ச நீதிமன்றத்தால் ஆளுநர் ரவி குட்டு வாங்கி இருப்பதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பெரியார் மண்,  சமூகநீதி மண், சுயமரியாதை மண் என பேசிய வீரமணி, கல்வி மற்றும் பேரிடர் என எதற்கும் நிதியை ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக அவர் கூறினார்.

ஆளுநரை ஒரு கருவியாக பயன்படுத்தி போட்டி அரசை நடத்தி, ஆர்.எஸ்.எஸ். பிரசாரத்தை நடத்துவதாகவும் அரசியலமைப்பை மாற்றி விட்டு மனுதர்மத்தை மாற்ற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். நினைப்பதாகவும் கி.வீரமணி கூறினார்.

இந்திய வரலாற்றிலேயே தமிழ்நாட்டின் மோசமான ஆளுநர் இவர் ஒருவர் தான் என, விமர்சித்தார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கமலாலயம் சென்று ஆர்.எஸ்.எஸ் பற்றி ரவி பேசட்டும் என வீரமணி கூறினார்.

மதக்கலவரத்தை உண்டாக்கி திமுக ஆட்சியை குறுக்கு வழியில் வீழ்த்த வேண்டும் என சிலர் நினைப்பதாகவும் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்களின் ஆட்சி என்றும் அசைத்தால் அதைவிட வளம் பெறும் என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மோசமான ஆளுநர் – வீரமணி விமர்சனம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “Dravidian stock” என்ன என்பதை நிரூபிக்கும் காலகட்டம் வந்துள்ளது என்றார். 40 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஆளுநர் ஒரு காரணம் என, அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு தமிழரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய பாரதி, இந்த மூன்று மாதங்கள் தூங்கிவிட்டால் இச்சமுதாயம் நூறாண்டுகள் தலை தூக்க முடியாது எனவும் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்தார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக ஆளுநர் உள்ளார் என்று விமர்சனம் செய்தார். முனிவர்கள் இந்த தேசத்தை, உலகத்தை படைத்திருக்கிறார்கள் என தெரிவித்த ஆர்.என்.ரவி, உண்மையிலேயே ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருப்பாரா என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் விவகார தீர்ப்பில் வன்மம் இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாடு பாதுகாப்பான இடம் என்றும் பாஜக-வால் தமிழ்நாட்டில் கால் வைக்கவே முடியாது என்றும் தெரிவித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஃபாசிச சக்திகளுக்கு எதிராக திமுக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என செல்வப்பெருந்தகை உறுதித் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மோசமான ஆளுநர் – வீரமணி விமர்சனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கண்டன உரையில் தமிழ்நாட்டின் அவமான சின்னம் ஆளுநர் ஆர்.என். ரவி என குறிப்பிட்டார். பிரதமர், ஆளுநர் மற்றும் நீதிபதி என யாரை கண்டிப்பது என்பதிலேயே குழப்பம் நிலவுவதாக கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாய்  கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில், இதுவரை ஏற்றாத இடத்தில் ஏற்ற வேண்டும் என சொல்வது ஏன்? என்று அவர் வினவினார்.

ஆளுநர்கள் ஒரு பக்கம் என்றால் நீதிபதிகள் அதைவிட மோசமானவர்களாக இருக்கிறார்கள் என விமர்சித்த பாலகிருஷ்ணன், ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் ஆளுநர் ரவி போன்றோரை திருத்த முடியாது என்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெறிபிடித்தவர் போல் பேசிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். மார்க்ஸ் பற்றி பேச ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவரின் கால் தூசிக்கு ஆளுநர் ரவி சமமில்லை என்றும் கடுமையாக பாலகிருஷ்ணன் சாடினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், சட்டத்தை மதிக்காமல் பொய் பேசும் ஆளுநர் ரவி, அரசிற்கு இடையூறு செய்வதாக கண்டனம் தெரிவித்தார். ஆளுநர் ஒரு நியமன வடிவம் என்றும் நியமன வடிவம் ஜனநாயகம் இல்லை என்றும் கூறினார். ஆளுநர் தமிழ்நாடு என்னும் பல்கலைக்கழகத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என வீரபாண்டியன் பேசினார்.

த.மு.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி தமது கண்டன‌ உரையில், ஆளுநர் வாய் கூசாமல் பொய் பேசுவதாக சாடினார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ பாரதியாரின் கவிதைகளைக் காட்டிலும் தெளிவாக தெரியும் என ஹாஜா கனி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு ஆளுநர் ரவியின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக வலுவான கண்டனத்தை பதிவு செய்தனர்.

உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன?

MUST READ