சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 தேதி, வங்கி மேலாளர் அகமது காதிரியை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர் வசதி தொடர்பான விவரங்களை கேட்டறிந்த பெண், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு நகைப்பையை வங்கியிலேயே விட்டு சென்றுள்ளாா்.

தகவல் அறிந்த வங்கி மேலாளர், அந்த பெண் திரும்ப வருவார் என காத்திருந்துள்ளா். ஆனால் ஐந்து நாட்கள் கடந்தும் அந்த பெண் வங்கிக்கு திரும்பி வராததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேலாளர் அகமது காதிரி, வேளச்சேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளாா். வங்கியின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
2026 தேர்தலில் எடப்பாடி முதலமைச்சராவது உறுதி – முன்னாள் பா.வளர்மதி


