சமக்கர சிக்ஷா திட்ட நிதியான 3,548 கோடி ரூபாயை வழங்காமல் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது என திமுக உறுப்பினர் வல்சன் குற்றம்சாட்டியுள்ளாா்.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய சமக்கர சிக்ஷா திட்ட நிதியான 3,548 கோடி ரூபாயை வழங்காமல் வைத்திருப்பது, மாநிலத்தை தண்டிக்கும் வகையில் உள்ள நடவடிக்கையாகும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி வழங்கப்படாததால், தமிழ்நாட்டில் மட்டும் 44 லட்சம் மாணவர்கள் மற்றும் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். கல்வித்துறையின் அன்றாட செயல்பாடுகள், வசதிகள், முக்கிய திட்டங்கள் அனைத்தும் பாதிப்படைவதாகவும் வில்சன் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் நீண்டகாலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாயம் TET தேர்வு எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறையும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார். இதனால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 98 லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக வில்சன் தெரிவித்தார்.
20 ஆண்டுகள் கூட பணியாற்றிய ஆசிரியர்கள் இந்த கட்டாயத் தேர்வு காரணமாக சிக்கலில் சிக்கி, கல்வி அமைப்பு பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து, TET தேர்வை கட்டாயமாக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளதாகவும் வில்சன் தெரிவித்துள்ளாா்.
49 நிமிடத்தில் 75 சிக்கன் வெரைட்டிகளை செய்து அசத்திய ரஜினி ரசிகர்!!


