spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில், எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு கோடி வாக்காளர் நீக்கப்படும் அபாயம்!!

தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு கோடி வாக்காளர் நீக்கப்படும் அபாயம்!!

-

- Advertisement -

தமிழ்நாட்டில், எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு கோடி வாக்காளர் நீக்கப்படும் அபாயம்!!தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என ஒரு கோடி பேர் நீக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாத கணக்கின்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், சுமாா் 1 கோடி பேர் நீக்கப்படும் அபாயம் உள்ளது. சென்னையில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மொத்தமாக 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், சென்னையில் 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படக்கூடும் என்றும், அதாவது மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, காஞ்சிபுரத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்…

MUST READ