spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் - உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…

நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…

-

- Advertisement -

செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி முழு கொள்ளளவை  எட்டியுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் - உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியை எட்டியுள்ளது. மேலும் மொத்த நீர் இருப்பு 3645 மில்லியன் கன அடி ஏரியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியில் ஏரிக்கரையை ஒட்டி வசிக்க கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ஏரி நீர் சூழ்ந்து இருப்பதால், அந்த பகுதி தனி தீவு போல் காட்சியளித்து வருகிறது. பெரும்பாலான பாதி வீடுகள் ஏரி நீரில் மூழ்கியுள்ளதால் வீடுகளை பூட்டிவிட்டு பொதுமக்கள்  உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மேலும் சிலர் அந்த பகுதியில் உள்ள மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில்  நீர் தேக்கி வைக்கமாட்டார்கள் எனவும் அவ்வப்போது திறந்து விடப்பட்டால், இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காது. தற்போது வழக்கத்திற்கு மாறாக முழு கொள்ளளவு நீரை தேக்கி வைத்து இருப்பதால், இந்த பகுதி முழுவதும் உள்ள குடியிருப்புகள் ஏரி நீரால் சூழப்பட்டு தனி தீவு போல் காட்சி அளித்து வருவதாகவும், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், ஏரியில் உள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேங்கியுள்ள நீரில் கழிவுகள், பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதி முழுவதும் தனி தீவு போல் காட்சியளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியா – இத்தாலி போரின் வரலாற்று சின்னங்களை பார்வையிட்டார் பிரதமர்…

we-r-hiring

MUST READ