அண்ணா சொன்னது போல் பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் வெளியிடப்படும் நூல்கள். திராவிட வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியவர்கள், திராவிட வரலாற்றை அழித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களும் சேர்த்து படிக்க வேண்டிய நூல்கள். இத்தனை தகவல்கள் இதுவரை கிட்டவில்லையே என ஏக்கத்தோடு தங்களை மாற்றிக்கொள்ளக் கூடிய ஆதாரப்பூர்வமான அற்புதமான நூல்கள் மூன்று கூர் ஆயுதங்கள். எத்தனையோ இருட்டடிப்புகளுக்கு இடையில் திரிபுவாதங்களுக்கு இடையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
திராவிடம் வெல்லும், அதை வரலாறு சொல்லும் என்று எழுச்சியுடன் அமர்ந்துள்ளார், எங்களுக்கு வழிகாட்டியாய் உலகமே பார்த்து வியக்கும் முதலமைச்சர். கலைஞருக்கு பிறகு வெற்றிடமாக இருக்கும். இடையில் அமர்ந்துகொள்ளலாம் என நினைத்தார்கள். என் ஆட்சியில் மற்றவர்கள் கற்றுக்கொண்டு போகும் அளவிற்கு இருக்கும் என அடையாளத்தை செய்தவர். திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் அதன் அமைப்பு என அனைத்தும் இருக்கும் வகையில் உள்ளது நூல்கள். ஆயுதம் தாங்காத புரட்சியை, அமைதி புரட்சியை அண்ணா சொன்னது போல் பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த மாற்றம் காரணமாகத்தான் எதிரிகள் இன்று எப்படியாவது முதல்வரை பார்த்து குறி வைக்கிறார்கள். ஆட்சியை நகற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் ஒரு வெற்றி பெற முடியாது. எங்கள் வரலாறு சாதாரண வரலாறு இல்லை. கலைஞர் முதலமைச்சரை உழைப்பு உழைப்பு என்று சொல்லி இருக்கிறார். ஆனால் 24 மணிநேரமும் நேரம் போகாமல் செயல் செயல் என்று செய்து கொண்டுள்ளார். அடக்கம் மிகுந்த முதல்வர், ஆற்றல் மிகுந்த ஆளுமை மிகுந்த முதல்வர். முதல்வர் எழுதியது ஆட்சி என்பது மகுடம் அல்ல. அது மக்களுக்கு சேவை ஆற்றுவதற்கான வாய்ப்பு. அந்தவாய்ப்பின் மூலம் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய இயக்கம் தான் திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறியாத சிலர் பல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்ன செய்தது? என்ன சாதித்தார்கள்? என்று கேட்கிறார்கள். இதோ என்ன செய்யவில்லை என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கி உள்ளார்கள்.
நீதிக்கட்சி 110 ஆண்டுகள் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 100 ஆண்டு காலம், திராவிட கழகம் 85 ஆண்டு காலம், திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டு காலம்.உலகளாவிய அளவிற்கு இந்த இயக்கம் பரவிக் கொண்டுள்ளது. நூல்கள் கருத்தாயுதங்கள். நிதி நெருக்கடி, ஆளுநர் அவதூறு பேச்சுக்கள், திரிசூலத்தை காட்டி காட்டி வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ என எல்லாரும் மிராண்ட போகும் அளவிற்கு ஓடுபவர்கள் கிடையாது. கருத்தாயுதங்கள் இவை. கீழடி கண்ட உடன் அலறுகிறார்கள். பொருநை வரலாற்றை சொல்லும்போது இல்லாத சரஸ்வதி நாகரீகத்தை தேடிக்கொண்டு உள்ளார்கள் என்று அறை கூவல் விடுத்தார். எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் நெருக்கடிகளையே சந்தித்தவர்கள் நாங்கள். ஆகவே நெருக்கடிகளில் இருந்து வெளியே வருவோம் என்று சொல்லும் துணிச்சல் மிக்கவராக முதல்வர் விரும்புகிறார். உலகத்தை பெரியாருடைய ஆக்கி பெரியாரை உலகமயமாக்கி வெளிநாடுகளில் முதலீடுகளை பெற்றது மட்டுமில்லாமல் முதலீடுகளை செய்தும் வருகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்தார்கள். திராவிடத்தின் வரலாற்றில் இவையெல்லாம் சாதாரண குறிப்புகள் அல்ல நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

SIR என்ற பெயரில் வாக்கு திருட்டு செய்யலாம் என்று முற்பட்டவர்களுக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் நம் முதல்வர். எதையும் சாதிக்க முடியாமல் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஒருபோதும் நாங்கள் தலை குனிய மாட்டோம், யாரையும் தலை குனிய விட மாட்டோம் என்று அற்புதமான முதலமைச்சர். கற்றுக்கொள்ள வேண்டியவர்களுக்கு பாடமாக இருக்கிறாரோ, அது போல் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் 2026 தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும் என்று சொன்னார். அரசியல் மேடைகளில் பேசவில்லை தமிழகத்தில் பேசவில்லை. குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசு திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைத்தார். நான் இந்த இயக்கத்தை நெருங்கக்கூட முடியாது என்பதற்கு மூன்று ஆயுதம் தான் இந்த மூன்று புத்தகங்கள். அவரால் துடைத்து எறிய முடியாது. அங்கிருந்து பலர் துடைக்கும் வேலைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களையும் நான் பாதுகாத்து வருகிறோம். குஜராத் மாநிலத்தின் அரசு நிகழ்ச்சி நடத்தும்போது கூட ஒருமுறை கண்டு மிரண்டு கொண்டிருக்கிறார் என்றால் அது தான் நம் முதலமைச்சர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


