கரூரில் 41 பேரை கொன்று குவித்த விஜயின் பின்னால் செல்வது ஏன்? என பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தெரிவித்துள்ளாா்.
கரூரில் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் சிக்கி உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூரில் 41 பேரை கொன்று குவித்த விஜயின் பின்னால் செல்வது ஏன்? என பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் பரபரப்பு பேட்டியளித்துள்ளாா். நான் ஏற்கெனவே விலங்கு போட்டிருக்கிறேன் என்பது போல் காட்டும் தலைவர் பின்னால் போகும் கூட்டம் அதிகமாகி வருகிறது. நடிகர்கள் பின்னால் இளைஞர்கள், குழந்தைகள் ஏன் போகிறார்கள் என்று கேள்வி கேட்க வேண்டும் என பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் ஆவேசமாக கூறியுள்ளாா்.



