spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!

மெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!

-

- Advertisement -

சென்னை மெரினாவில் காவலர்கள் ஒருவரையொருவா் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் நேற்று திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம், சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து காவலர் ராகவனை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலர்களாக பணியாற்றும் ராகவன், லியோ சார்லி இருவருக்கும் கடந்த 31 ஆம் தேதி( புத்தாண்டு பணி) இரவு பணி போடப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில், உயர் அதிகாரிகள் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, கண்ட்ரோல் ரூமில் ரிப்போர்ட் செய்ய சொல்லியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராகவன் லியோ,சார்லி இருவரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேலிடம் எங்களை ஏன் உயர் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தீர்கள் என கேட்க மெரினாவுக்கு வந்துள்ளனர்.

we-r-hiring

காவல் ஆய்வாளர் சக்திவேல் மெரினா சர்வீஸ் சாலையில் இல்லாததால், பணியில் இருந்த சண்முகசுந்தரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் கையால் தாக்கியுள்ளார்.இதை லியோ சார்லி வீடியோ எடுத்து பலருக்கும் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் ராகவன், லியோ சார்லி, சண்முகசுந்தரம் மூன்று பேரிடமும் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒழுங்கீன நடவடிக்கையால் மூன்று பேரும் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 நிமிடத்தில் 500 ஆங்கில வார்த்தையை கூறி அசத்திய அரசு பள்ளி மாணவன்!!

 

MUST READ