தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழ்நாட்டில் வளிமண்டல மாற்றம் காரணமாக வரும் நாட்களில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 10 மாடவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 11 ஆம் தேதி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


