வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ ரூ.2,000, கனகாம்பரம் ரூ.2,000, சம்பங்கி ரூ.150, ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது. அதிகாலை நேரப் பனிப்பொழிவு மல்லிகைப் பூக்களின் விளைச்சலை வெகுவாகக் குறைத்துள்ளது. வழக்கமாக கிடைக்கும் அளவில் பூக்கள் வராததால் வரத்து குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லிகைப் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒரு காரணம் போன்றவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிபிஐ விசாரணை! விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள்! ரிப்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாஜக!


