விஜய்க்கு அனுபவம் இல்லை அவர் பூஜ்யம் மாதிரி, நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறும் அணிக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சித்துள்ளாா்.
நாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர்கள் குஷ்பு, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, ”தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது, ஒரு சின்ன பையனின் பேச்சாக தான் விஜய் பேச்சை பார்க்கிறேன். உண்மையாகவே தம்பி விஜய் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அவர் தனியாக நின்றால் ஜீரோ தான் என கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் ஆதரவு தருவார்கள். காங்கிரஸில் இன்று விசில் அடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நானும் உச்சபட்ச பதவியில் இருந்து தான் வந்துள்ளன். அண்ணாமலையும் ஐபிஎஸ் பதவியை விட்டு வந்துள்ளார். பலர் உச்சபட்ச பதவியை விட்டு வந்துள்ளனர்.
விஜய்க்கு அனுபவம் இல்லை, விஜய் பூஜ்யம் மாதிரி எனவும் அதோடு ஒரு எண் சேர்ந்தால் மதிப்பு அதிகம் எனவும் தெரிவித்தார். அனுபவம் இல்லாத விஜய் யுடன் சேர யாருக்கும் விருப்பம் இல்லை எனக் கூறினார்.
மொழி போர் தியாகிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் முடியும், ஒரு மாநிலத்தை ஆளும் உங்களுக்கு இவ்வளவு இருந்தால் 17 மாநிலங்களில் ஆளும் அளவிற்கு பாஜக உள்ளது.
எம்ஜிஆர் அரசியலோடு சினிமாவில் பயணித்தவர், அதனால் அரசியலில் வெற்றி பெற்றார். விஜய் நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றிபெற முடியாது. தனது தொண்டர்கள், ரசிகர்களை ஏமாற்றிவிட வேண்டாம்.
வெற்றி பெரும் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என விஜய்க்கு தமிழிசை சௌந்திரராஜன் அறிவுறுத்தினார். விஜய் தனித்து நிற்பதை காட்டிலும் யாருடன் கூட்டணியில் நிற்றால் நன்றாக இருக்கும் என்று கூறிய தமிழிசை, விஜய் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அடுத்த தேர்தலில் NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவர் தொடர்ந்து அரசியல் செய்யலாம் எனவும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் விவகாரத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளாா்.


