இந்திய அஞ்சல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் முக்கியமான துறையாகும். இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன. இதனால் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள் சிறந்த வாய்ப்பாக இருந்து வருகின்றன.
- 2026 ஆம் ஆண்டுக்கான ஜிடிஎஸ் வேலைவாய்ப்பு
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான இந்திய தபால் துறை கிராம அஞ்சல் பணியாளர் (GDS) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களான கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) மற்றும் அஞ்சல் பணியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.
இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்பு அட்டவணையின் படி, நாடு முழுவதும் மொத்தம் 28,740 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 31, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- மாநில வாரியான பணியிட விவரம்
இந்த ஆட்சேர்ப்பில்,
தமிழ்நாடு – 2,009 பணியிடங்கள்
கர்நாடகா – 1,023
ஆந்திரப் பிரதேசம் – 1,060
கேரளா – 1,691
தெலுங்கானா – 609
ஒடிசா – 1,191
ஹரியானா – 270
உள்ளிட்ட பல மாநிலங்களில் சேர்த்து மொத்தம் 28,740 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. - முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம் : ஜனவரி 31, 2026
விண்ணப்ப கடைசி தேதி : பிப்ரவரி 14, 2026
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : பிப்ரவரி 16, 2026
விண்ணப்ப திருத்தம் : பிப்ரவரி 18 – 19, 2026
தகுதி பட்டியல் வெளியீடு : பிப்ரவரி 28, 2026 - கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறை
கிராம அஞ்சல் பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த எழுத்துத் தேர்வும் இல்லை. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாநில உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு
குறைந்தபட்ச வயது : 18 வயது, அதிகபட்ச வயது : 40 வயது, அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். எஸ்சி / எஸ்டி – 5 ஆண்டுகள், ஓபிசி – 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள். - சம்பள விவரம்
கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) : ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை, உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) : ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை. - விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://indiapostgdsonline.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
த.வெ.க – அதிமுக மோதல்! நான்கு முனை போட்டியில் முந்தும் திமுக! ப்ரியன் நேர்காணல்!
