spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅள்ளிவிட்ட மோடி! அல்வா கொடுத்த நிர்மலா! பிரித்து மேய்ந்த பொன்ராஜ்!

அள்ளிவிட்ட மோடி! அல்வா கொடுத்த நிர்மலா! பிரித்து மேய்ந்த பொன்ராஜ்!

-

- Advertisement -

மத்திய அரசின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

2026 – 2027ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இது வாய்ப்பு தரும் பட்ஜெட் ஆக உள்ளது. ஆனால் வாய்ப்பு மட்டும் போதாது. நடைமுறை தெளிவாக இருக்க வேண்டும். கனிம வளங்கள், செமி கண்டக்டர், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு எப்போதும் தயார் நிலையில் தான் உள்ளது. ஆனால் அதை செயல்படுத்துவதற்கான முதலீடுகள் எப்போது வரும்? குஜராத்துக்கு செமி கண்டக்டர் திட்டம் தொடங்க ரூ.40,000 கோடி ஒதுக்குகிறார்கள். அங்கே ரூ.90,000 கோடியில் டாடா ஆலை தொடங்குகிறது.

ஆனால் தமிழ்நாட்டிற்கு எல்லாம் பாலிசி பேப்பரில் உள்ளது. பணம் ஒதுக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி கொடுத்ததாக சொல்கிறார். அதற்கு ஏதாவது வெள்ளை அறிக்கை உள்ளதா? தமிழ்நாட்டிற்கு கடந்த 5 ஆண்டுகளில் வரி பகிர்வாக 1.75 லட்சம் கோடி கொடுத்துள்ளனர். அதேவேளையில் உ.பி-க்கு 7.5 லட்சம் கோடியும், பீகாருக்கு 4.25 லட்சம் கோடியும் கொடுத்துள்ளனர். மற்ற திட்டங்களுடன் சேர்த்து 6 லட்சம் கோடி தான் இருக்கும். அப்போது 11 லட்சம் கொடுத்ததாக கூறுவது குறித்து பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை என்கிறார்கள். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. சமக்ரா சிக்ஷா நிதி ரூ.3,000 கோடி வழங்கவில்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் அந்த துறையை மேம்படுத்த நிதி போதிய அளவு ஒதுக்கவில்லை. வேலைவாய்ப்பு குறைவாக உள்ளதாக சொல்கிறார். பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை. கார்ப்பரேட் பட்ஜெட் ஆக இது அமைந்துள்ளது.

மலையேற்றம், பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டுவதாக கூறுவது நல்ல விஷயம்தான். அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 28 லட்சம் கோடி கடன் வழங்கி இருப்பதாக நிதியமைச்சர் சொல்கிறார். கடன் கட்டவில்லை என்றால் 3 மாதத்தில் சர்பாசி ஆக்டில் கம்பெனியை மூட வைக்கிறீர்கள். 150 மில்லியன் பேருக்கு வேலை தருகிற இந்த துறைக்கு ரூ.10,000 கோடி எநத மூலைக்கு பத்தும்?

மெட்ரோ ரயில் சேவை

இந்தியாவில் அமைப்பு சார தொழில்களே  40 முதல் 50 சதவீதம் உள்ளது.  அந்த துறையை அப்படியே புறக்கணித்துவிட்டு நீங்கள் எந்த வளர்ச்சியை அடைய முடியும்? MSME நிறுவனங்கள் தான் வளர்ச்சிக்கான என்ஜின்கள் ஆகும். அமெரிக்க அதிபர் டிரம்ப் 500 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் திருப்பூர், கோவையில் விசைத்தறி, பவுண்டரி தொழில்கள் பாதிக்கப்படுகிறது. சிவகாசி பிரிண்ட்டி, பட்டாசு தொழில்கள். சென்னை ஆட்டோ மொபைல் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. அரிதான கனிமங்கள் வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் எந்த மாவட்டத்தில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க போகிறார்கள்? எவ்வளவு முதலீடுகள் வரப்போகிறது. கனிம வளங்களை எடுப்பதற்கு என்ன திட்டம் வைத்துள்ளனர். நிதி பற்றாக்குறையை 2027க்குள் 4 சதவீதத்திற்குள் கொண்டு வருவதாக கூறியுள்ளனர். மாதத்திற்கு ஒன்றரை லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் வருகிறது. இருந்தபோதும் இந்தியா இன்னும் கடன் சுமையில் தான் தத்தளித்து கொண்டிருக்கிறது.

ரூ.11.7 லட்சம் கோடி கடன் வாங்குவதால் நீண்ட கால வட்டி விகிதங்கள் உயரும். தற்போது மத்திய அரசு ரூ.250 லட்சம் கோடி வரை கடன் வாங்கியுள்ளது. அப்போது நாம் கட்டுகிற ஜிஎஸ்டி எல்லாம் வட்டிக்கு தான் செல்கிறது. மத்திய அரசு கடன்களை வாங்கி தான் உட்கட்டமைப்புகளை உருவாக்குகிறது. வட்டியும், கடனும் வாங்கிவிட்டு நம்முடைய வரிப்பணம் எல்லாம் அங்கு தான் செல்கிறது. புதிய சரக்கு வழித்தடங்கள், தேசிய நீர்வழிச் சாலைகள், கடற்கரை சரக்கு திட்டம் போன்றவற்றால் செலவு குறைப்பு என்கிறார்கள். வாரணாசி, பாட்னாவில் உலக கப்பல் பழுது மையங்கள், கிழக்கு இந்தியா வளர்ச்சிக்காக அமைக்கப்படுகிறது. 7 அதிவேக ரயில்பாதைகள் பொருளாதார ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் என்கிறார்கள். 5 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்கள், கோவில் நகரங்கள் மீது கவனம் செலுத்துகிறார்கள்.

இவற்றில் என்ன அபாயம் உள்ளது என்றால்? அதிகவேக ரயில், நீர்வழித்தடங்கள் என்பது அதிக செலவு மற்றும் பயன்பாட்டிற்கு வர நீண்ட காலமாகும். அதனுடைய பலன் எப்போது வரும் என்று தெரியாது. எனவே இது தொலைநோக்கு திட்டமாகும். தொலைநோக்கு பார்வை அவசியம் தான். ஆனால் அதற்கான அடிப்படைகளை செய்யவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ