spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை"விஜய் ஜெயிக்க வாய்ப்பு இல்லை"... ! த.வெ.க. கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ்? தராசு ஷ்யாம்...

“விஜய் ஜெயிக்க வாய்ப்பு இல்லை”… ! த.வெ.க. கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ்? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

விஜயுடன், சசிகலா – ஓபிஎஸ் போன்றவர்கள் சேர்ந்தால், அது விஜய்க்கான வாக்குகளை பெருமளவுக்கு குறைக்கும். எனவே விஜய் தனித்து போட்டியிடுவது தான் அவருக்கு சிறந்தது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு செல்வதில் தவெகவுக்கே விருப்பம் உள்ளதா என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. திமுக கூட்டணியில் 40 இடங்கள் கேட்கிற காங்கிரஸ், தவெக கூட்டணிக்கு செல்கிறபோது 70-80 இடங்கள் வரை எதிர்பார்க்கும். தவெகவில் ஏற்கனவே செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜ்மோகன் போன்றவர்கள் வந்ததால், அக்கட்சியில் உள்ள பழைய ஆட்களுக்கு 50 இடங்கள் வரை கிடைக்காது. தற்போது காங்கிரசும் கூட்டணிக்கு செல்கிறபோது 100 இடங்கள் வரை தவெகவுக்கு இருக்காது. மாவட்ட செயலாளர்கள் சீட்களை எதிர்பார்க்காதீர்கள் என்று விஜய் சொன்னதில் நிறைய மாவட்ட செயலாளர்களுக்கு வருத்தம் உள்ளது. காங்கிரசின் கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இதுதான் சரியான நேரம். முதலமைச்சரின் இன்றைய அதிரடி அறிவிப்பு காங்கிரசை மௌனம் ஆக்கிவிடும் என்பது என்னுடைய பார்வையாகும். சேலம் மாவட்டத்தில் விஜய் நிர்வாகிகள் கூட்டம் நடத்தியுள்ளது. ஆண்டு விழாவையே ஹால் மீட்டிங் போடுகிறார். அடுத்தபடியாக வேலூரில் கூட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

பொதுவாக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் போட்டால் மாலையில் தான் நடத்துவார்கள். மாலை 4 மணி முதல் 9 மணிக்குள் எப்போது நேரம் கேட்டாலும் அரசு அனுமதி கொடுக்கும். ஆனால் தவெக தரப்பில் கேட்பதே மதிய வேளையில் தான் கேட்கிறார்கள். விஜயினுடைய வசதிக்கு ஏற்ப நேரம் கேட்கிறார்களே தரவி, பார்வையாளர்களின் வதிக்கு ஏற்ப நேரம் கேட்கப்படுவது இல்லை. ஒரு வேளை நாளில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரையிலான கூட்டத்திற்கு எப்படி சாதாரண பார்வையாளர்கள் போக முடியும்? தவெக மக்கள் சந்திப்பு என்று சொன்னாலும், அவர்கள் மனதில் உள்ளது நிர்வாகிகள் சந்திப்பு தான். ஆனால் வெளியில் தங்களுக்கு அனுமதியே தரவில்லை என்று சொல்வார்கள். ஒருவேளை அனுமதி கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றால் அவர்களுடைய தவறுகள் வெளியே வந்துவிடும். எனவே அரசியல் மன்றத்தில் திமுக மீது குற்றம்சாட்டுவார்களே தவிர, அதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதில்லை. அதன் காரணமாகவே இந்த கூட்டங்கள் டிசைடு எபக்ட் கொடுப்பது இல்லை. ஒரு கூட்டம் டிசைடு எபக்ட் கொடுக்க வேண்டும். அப்படி எபக்ட் வருவதற்கு ஒரு கூட்டத்திற்கு நோக்கம் இருக்க வேண்டும்.  அப்போது தலைவர்களின் சௌகரியம் முக்கியமா? மக்களின் சௌகரியம் முக்கியமா?

தவெக தரப்பில் பேசுகிறபோது மக்களுக்காக தலைவர்கள் போய் நிற்கும் நிலை மாறி, தலைவருக்காக மக்கள் வாக்கு கேட்கிற புரட்சி ஏற்படும். முதல் நாள் இரவே வாக்குச்சாவடி மையத்தில் போய் நிற்பார் நிலை ஏற்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் அது வெற்றுப் பேச்சு ஆகும். மக்கள் பல நேரங்களில் மாற்றம் முடிவை எடுப்பார்கள். ஆனால் அவர்கள் எத்தனை சதவீதம் என்று பார்க்க வேண்டும். கோர் வாக்கு வங்கி என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள இயல்பான வாக்கு வங்கியாகும். அதை தாண்டி தான் நாம் கணக்கு செய்ய வேண்டும். அதற்கு தான் கூட்டணி. கூட்டணி கட்சிகளின் வாக்குகள் வரட்டும் என்று நினைப்பார்கள். அரசின் அதிரடி திட்டங்கள் மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கை 20 சதவீதம் வாக்குகளை தரும். அதையும் தாண்டி உள்ளுர் வேட்பாளரின் மெரிட்களாகும். திமுக, அதிமுகவில் உள்ளுர் வேட்பாளர்கள் இயல்பாகவே இருப்பார்கள். இதேபோல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகளிலும் செல்வாக்கான இடங்களில் இருப்பார்கள். ஆனால் தவெகவில் அப்படியான உள்ளூர் வேட்பாளர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். காரணம் உள்ளூர் அளவில் இருப்பவர்களுக்கான அறிமுகம் இன்னும் வரவில்லை. அப்போது சட்டமன்றத் தேர்தலில் அவர்களால் எந்த அளவுக்கு வெற்றிகளை குவித்துவிட முடியும்? எனவே தவெகவின் வாதம் ஏற்புடையது அல்ல.

ஓ.பன்னீர்செல்வம்

மற்ற அணிகளில் சேராமல் இருக்கும் மருத்துவர் ராமதாஸ், சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்களுக்கு கூட்டணிக்கான வாய்ப்பாக விஜய் இருப்பாரா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காங்கிரசையே கூட்டணி சேர்க்க முடியாத போது, சசிகலாவை எப்படி சேர்க்க முடியும்? சசிகலா மீது உள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் மக்கள் நினைவுகளில் தான் உள்ளன. ஓபிஎஸ், சசிகலா மீது குற்றச்சாட்டுகள் வைத்த நிலையில், இருவரும் விஜயிடம் போய் ஒருங்கிணைகிறார்கள் என்றால் அவருடைய வாக்குகள் குறையத்தான் செய்யும். காங்கிரஸ் போய் சேர்ந்தாலே வாக்குகள் குறையத்தான் செய்யும் என்பது என்னுடைய கணிப்பு. விஜயின் சிறப்பு அவர் அரசியலுக்கு புதியவராக போட்டியிடுவது தான். சீமானுடைய சிறப்பும் கூட்டணி சேராத தன்மைதான். விஜயகாந்த், அதிமுக உடன் கூட்டணி வைத்து 41 இடங்களில் மட்டுமே நின்றபோதும் வெற்றி வாய்ப்பு வந்துவிட்டது. ஆனால் விஜய் 150 இடங்களில் போட்டியிடுவார். அவருடன் மற்றவர்கள் சேரப் போகிறார்கள் என்றால், விஜயின் ப்ரெஷ்னஸ் என்கிற அப்பீல் போய்விடும்.

சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்கள் போகிறபோது உள்ளூர் நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்காமல் போய்விடும். அப்போது நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற மாட்டார்கள். அதில் விஜயும் தயங்குகிறார் என்று நினைக்கிறேன். செங்கோட்டையனுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பெரிய நபர்களை எடுக்க முடியாததற்கு காரணம் இதுதான். ஒவ்வொருவர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் தான் அதற்கு காரணம். சசிகலா, விஜய் இணைந்து வேட்பாளர் நிறுத்தினால் அதிமுக, அமமுக தான் பாதிக்கப்படும். டெல்டா முதல் தென் மாவட்டங்கள் வரை 20 முதல் 25 தொகுதிகள் வரை கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வங்கியை உடைப்பார்கள். கமுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சசிகலா கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா, ஓபிஎஸ் ஒன்றாக பங்கேற்கிறார்கள் என்றால், அந்த பகுதியில் உள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு வாக்குகளில் பாதிப்பு ஏற்படுத்தும். அதோடு விஜய் சேர்ந்தால் பாதிப்பு ஏற்படுத்தாது. அது அப்படியே அதிமுகவுக்கு போய்விடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ