spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்களவைத் தேர்தல்…ஆறு இடங்களுக்கு கடும் போட்டி…எம்.பி. ஆகப் போவது யார்?

மாநிலங்களவைத் தேர்தல்…ஆறு இடங்களுக்கு கடும் போட்டி…எம்.பி. ஆகப் போவது யார்?

-

- Advertisement -

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  எம்.பி.யாகப் போவது யார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

மாநிலங்களவைத் தேர்தல்…ஆறு இடங்களுக்கு கடும் போட்டி…எம்.பி. ஆகப் போவது யார்?

we-r-hiring

திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் எம்.பி. பதவிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  திமுக சார்பில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அகிய 4 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதிமுக தரப்பில் மூத்த தலைவர் மு.தம்பிதுரை, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதிவிக்காலமும் முடிவக்கு வருகிறது.

அதிமுக சார்பில் தம்பிதுரை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக விருப்பம் தெரிவித்துள்ளாா். ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அண்மையில் அன்புமணி – எடப்பாடி இடையிலான கூட்டணி ஒப்பந்தத்திலும் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தர உறுதியளிக்கப்ட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2026ல் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்  வழங்கப்படும் என ஏற்கனவே எடப்பாடி முன்பே உறுதி அளித்திருந்தாா்.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கே 2 இடங்களையும் கொடுத்துவிட்டால் அதிமுக மூத்த தலைவர்களிடம் அதிருப்பதி உருவாகும் சூழல் உருவாக  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஜி.கே.வாசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற  தகவலும் வெளியாகியுள்ளது.

திமுக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திருச்சி சிவா 4-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் 4 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு இடத்தை கேட்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் வழங்க திமுக முன்வந்தால், அது சட்டமன்ற தொகுதி பங்கீட்டுக்கு சாதகமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், தவெகவுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் இருந்த காங்கிரஸ் வட்டாரத்துக்கு இந்தத் தேர்தல் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், காலியாகும் 6 இடங்களுக்கு திமுக, அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சியினர் என அனைத்துத் தரப்பிலும் கடும் போட்டி நிலவுகிறது. இறுதியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கட்சித் தலைமைகளின் அரசியல் கணக்கீடுகள் மற்றும் கூட்டணி சமநிலைகளையே சார்ந்திருக்கிறது.

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

MUST READ