spot_imgspot_img
Homeசெய்திகள்ஓட்டுக்காக போலியான தகவலை பரப்பும் த.வெ.க தலைவர் விஜய்;

ஓட்டுக்காக போலியான தகவலை பரப்பும் த.வெ.க தலைவர் விஜய்;

-

- Advertisement -

வேலூர் மாவட்டத்தில் த.வெ.க  சாா்பில் பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் “கரூர் சம்பவத்தில் என் மீது ஏன் பழி சுமத்தினீர்கள் சி.எம். சாா் “? என்று முதல்வர் நோக்கி  த.வெ.க தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளாா்.வேலூர் மாவட்டம் அகரம்சேரில் பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கட்சி நிர்வாகம் குறித்து ஆலோசனையோ, தேர்தல் வாக்குறுதிகள் குறித்தோ, தேர்தல் களப்பணியின் செயல்பாடுகள் குறித்தோ பேச வேண்டும் என்கிற அடிப்படை கோட்பாடு கூட தொியாமல் தமிழக முதல்வரின் மீது அபாண்டமாக பழிப்போடும் தவெக தலைவர் விஜய் ஓன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக விஜயின் மீது பழி சுமத்தியதாகத் தகவல் ஏதும் இல்லை. கரூர் சம்பவம் குறித்த வீடியோ ஒன்றை அன்று முதல்வர்  வெளியிட்டு இருந்தார் அதில் “சமூக வலைத்தளங்களில் பரவும் சில பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தொண்டர்களுக்கு இதுபோன்ற அசம்பாவிதம் நடக்க விரும்ப மாட்டார்கள். உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை  சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் “தமிழ் உறவுகளே ” என்றுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த காணொளியில் தெரிவித்திருந்தாா். “அதில் உங்களை பழி போடவில்லை, வேறு எந்த பழியும் சுமத்தவில்லை” என்று கூறப்பட்டிருக்கையில், ஏன் பொய்யான தகவலை பரப்புகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது.

we-r-hiring

முதலமைச்சரை கேள்விக் கேட்பதற்கு முன், தவெக தலைவர் விஜய் ஒரு நிமிடம் கண்ணாடி முன் நின்று நீங்களே உங்களைக் கேட்டுப் பார்த்தீங்களா? செப்டம்பர் 27, 2025 அன்று திருவள்ளூரில் நடைபெற வேண்டிய பொதுக்கூட்டம்  திடீரென கரூருக்கு மாற்றப்பட்டதற்கு காரணம் என்ன? கரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு விஜய் 7 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்தது ஏன்? மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதை முன்கூட்டியே ஏன் கணிக்கவில்லை? கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறியது யார்? கூட்ட நெரிசலை சமாளிக்க விஜய் தொண்டர்கள் எடுத்த முயற்சிகள் என்ன? கரூர் கூட்டத்தில் பங்கேற்ற மக்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள் முறையாக கவனிக்கப்பட்டதா? கரூரில் பொதுக்கூட்டம் நடத்த அடிப்படை வசதிகள் இன்றி மக்களை வெயிலில் நிறுத்தியது யார்? கட்டுப்பாடின்றி மரங்கள், கம்பங்கள் மீது ஆபத்தான உயரங்களில் நின்றது யாருடைய கூட்டத்தில்? அதை ஒழுங்குபடுத்த தவறியது யார்? என்று த.வெ.க தலைவர் விஜய் அவருக்கு அவரே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.”பழி போடுகிறார்கள்” என்று சொல்வதினால் மட்டும் த.வெ.க தலைவர் விஜய் செய்த தவறுகள் எல்லாம் மாறிவிடுமா?ஓட்டுக்காக போலியான தகவலை பரப்பும் த.வெ.க தலைவர் விஜய்;ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் ஊழல்வாதிகள் என த.வெ.க தலைவர் விஜய் பேசுகிறார். விஜய் மட்டும் என்ன செய்தார்? புலி படத்திற்கு பெற்றதாக கூறப்படும் 15 கோடி ரூபாய் சம்பளத்தை கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்தது யாா்? அது ஊழலுக்கு எதிரானவை இல்லையா?

அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் தரம் உயா்த்தப்படும் என்று த.வெ.க நிர்வாகிகள் கூட்டத்தில்  சில வாக்குறுதிகளை விஜய் முன் வைத்தாா். ஆனால் எந்த வகையில்  தரமாக மாற்றப் போகிறார்?

மேலும், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களில் 50% பெண்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். முதலில் அவரது கட்சியின் மாவட்ட செயலாளர்களில் 50% பெண்கள் உள்ளனரா? மொத்தத்தில், சர்க்கார் படத்தில் காட்டிய “ஒரு விரல் புரட்சி” போல, இப்போது “விசில் புரட்சி” என த.வெ.க தலைவர் விஜய் பேசிக் கொண்டு வருகிறாா்.

இப்படியிருக்க விஜய் இப்படி ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழக முதல்வர் பதவிக்கும் வயதுக்கும் உரிய மரியாதை அளிக்காமல் இழிவாக பேசி வம்புக்கு இழுத்து வருகிறார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ அசிங்கத்தை மிதிக்காமல் கடப்பது போல் விஜயின் பேச்சுக்களை கடந்துசெல்கிறார்.

இதில் நாம் உற்றுநோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விஜய் ஏன் முதல்வரை மட்டும் டார்கெட் செய்கிறார்?

முதல் காரணமாக, சிபிஐ, சென்சார் போர்டு, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளின் மூலம் த.வெ.க தலைவர் விஜய் நெருக்கடியில் தள்ளப்பட்டாா். மேலும், பாஜக தரப்பிலிருந்து கடுமையான சிக்கல்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், த.வெ.க. விஜய் பாஜகவை நேரடியாக எதிர்க்க அஞ்சி, முதல்வர் ஸ்டாலினை மட்டும் டார்கெட் செய்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு காரணம், த.வெ.க. விஜய் சினிமாவில்  வீரவசனங்கள் பேசுவது போல அரசியல் மேடைகளிலும் ஹீரோ– வில்லன்  பாணியில் வசனம் பேசுவதும், கோபமாக நடப்பதும் போன்ற நடைமுறைகளை பின்பற்றுகிறார் என்ற சந்தேகமும் எழுகிறது.

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

MUST READ